சனி, 22 ஜனவரி, 2011

விலைமகளுக்கு பிரதமர் கொடுத்த உறுதிமொழி

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு 74 வயது ஆகிறது. அவருக்கு வயது ஏறினாலும், அவர் ஆசைக்கு வயது ஆகவில்லை. அவர் இன்னும் இளைஞனைப்போல காதல் லீலைகள் செய்து வருகிறார். விலை மகளிரை அழைத்து விருந்து கொடுத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து வருகிறார்.

அவர் வயது முதிர்ச்சி அடையாத 17 வயது பெண்ணான கரீமா எல் மக்ரூக் என்ற பெண்ணிடம் செக்ஸ் உறவு வைத்து இருந்ததற்காக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ரூபி என் அழைக்கப்படும் கரீமாவும் ஒரு முக்கிய சாட்சி ஆவார். அவர் வாயை திறந்து உண்மைகளை சொன்னால் அவருக்கு சிறைத்தண்டனை கிடைக்கும்.

இதனால் அவர் கரீமாவுக்கு வாய்ப்பூட்டு போட விரும்பினார். அவர் அந்த பெண்ணை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த பேச்சு ஒட்டுக்கேட்கப்பட்டு வெளியாகி உள்ளது. அதில் அவர் ரூபி, உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்.

உன்னை தங்கத்தாலேயே மூடுகிறேன். நீ மட்டும் எதைப்பற்றியும் வாயை திறக்கக்கூடாது என்று கூறினார். இதற்கு சம்மதித்த ரூபி, தனக்கு ரூ.35 கோடி ரூபாய் தரவேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல