சனி, 22 ஜனவரி, 2011

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறாவிட்டால், பணயக்கைதிகளை கொன்று விடுவோம்

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில் வேலை செய்து வந்த 5 பிரெஞ்சு நாட்டினர் உள்பட 7 வெளிநாட்டினர் கடத்தப்பட்டனர். அவர்களை வடக்கு ஆப்பிரிக்கா பிரிவான அல்கொய்தா தீவிரவாதிகள் தான் கடத்தினார்கள். இந்த நிலையில் அவர்களை விடுவிப்பது தொடர்பாக அல்கொய்தா தலைவர் பின்லேடன் ஒரு ஆடியோ டேப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த டேப்பை அல்ஜசீரா டி.வி.சேனல் ஒளிபரப்பியது. அதில் பின்லேடன் கூறிஇருப்பதாவது:-

பிரெஞ்சு அதிபர் சர்கோசி, ஆப்கானிஸ்தானில் இருந்து தன் ராணுவத்தை திரும்பப்பெற மறுத்து வருகிறார். இது பிரெஞ்சு பணயக்கைதிகளை கொல்வதற்கு பச்சைக்கொடி காட்டியது போன்றது ஆகும். பிரெஞ்சு மக்களுக்கு நாங்கள் விடுக்கும் செய்தி என்ன என்றால் அது நேற்று என்னவாக இருந்ததோ அது தான் இன்றும். உங்கள் சகோதரர்களை நாங்கள் விடுதலை செய்யவேண்டுமானால், அது எங்கள் மண்ணில் இருந்து உங்கள் வீரர்களை விலக்கிக்கொள்வதை பொறுத்து இருக்கிறது.

இவ்வாறு அந்த டேப்பில் பின்லேடன் கூறி இருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல