சனி, 22 ஜனவரி, 2011

இந்திய சட்டத்தரணி இலங்கையில் கைதா?

சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணி கயல்விழி என்ற அங்கையற்கண்ணி இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது என இந்திய தினத்தந்தி ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் அச்செய்தியில் குறித்த சங்கம் வெளியிட்ட அறிக்கை எனக் கூறப்பட்டு ஒரு அறிக்கை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையிலே, இலங்கையில் ஓமந்தை சோதனைச்சாவடியில் சட்டத்தரணி அங்கையற் கண்ணியையும், அவரது உதவியாளர் திருமலையையும் இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். முறையான கடவுச்சீட்டு மற்றும் விசாவை வைத்திருந்தாலும், அவர்களிடம் கைதுக்கான எந்த காரணமும் கூறப்படவில்லை.

தமிழ்நாடு சட்டத்தரணிகளுக்கு எதிராக, இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கையை எங்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இந்த விஷயத்தில் உடனே தலையிட்டு அங்கையற்கண்ணியையும், திருமலையையும் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு திரும்பிவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் குறிப்பிப்பட்டுள்ளது.

இதேவேளை பெண் சட்டத்தரணி சங்கத்தின் தலைவர் பிரசன்னா மற்றும் செயலாளர் நளினியும் இந்த கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சட்டத்தரணி புகழேந்தி தலைமையில் வக்கீல்கள் பலர், இலங்கை அரசை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனவும் குறிப்பிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல