வெள்ளி, 21 ஜனவரி, 2011

த.வி.கூ, புளொட் மற்றும் த.தே.கூ ஒன்றிணைந்தது

நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி தேர்தலிலே தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:-

நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி தேர்தலிலே தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்று ஒரு கோரிக்கையை நான் முன்வைத்தேன். அதேநேரத்தில் அது போன்று பலர் வேண்டுகோள்களை முன்வைத்தனர்.

ஆனால் எவ்வளவு முயற்சி செய்த போதும் அனைவரையும் ஒன்றிணைக்க முடியவில்லை.

தற்போதைக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஒன்றிணைந்து தேர்தலில் போட்டி போட தீர்மானித்திருக்கிறோம்.

ஆகவே இம்மூன்று கட்சிகளும் பொதுச்சின்னமாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமான வீட்டின் கீழ் போட்டியிட உள்ளோம்.

காலத்தின் அவசியம் காரணமாகவே இவ்வாறு இணைந்து கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

பலருக்கு தெரியாது நாங்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறோம் ஆனால் எம் இனம் அழிந்து கொண்டு போகிறது.

எத்தனையோ மன்னிக்க முடியாத பொறுக்க முடியாத சம்பவங்கள் பல நடக்கின்றன.

ஆகவே இந்த சமயத்தில் ஒரு ஒற்றுமை தேவைப்பட்டது. அதனால்தான் நான் வலியுறுத்தினேன். அரசுடன் இணைந்துள்ள கட்சிகளை தவிர ஏனைய தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று ஆனாலும் தற்போதைக்கு மூன்று கட்சிகளால் மாத்திரம் இணைந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல