வெள்ளி, 21 ஜனவரி, 2011

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது என்று விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார். இராணுவத்தினர் பெரும்பாலான சந்திகளில் நின்கின்றனர் எனவும் அவர் தெரிவிக்கிறார். இரவு நேரத்தில் புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணம் இருண்டதும் பதற்றத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரவு வேளைகளில் 11 மணியின் பின்னர் யாழ்ப்பாணத் தெருக்களில் பயணிப்பவர்கள் அதிகாலை வரை தடுத்து வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கபடுகிறது. பொலிஸ் நிலையத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று இராணுவம் தெரிவிக்கிறது.
யாழ்ப்பாணத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டன என்றும் அவற்றை தடுக்கவே பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருப்பதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இரவு வேளையில் பேரூந்துகளில் பயணம் செய்பவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல