பாம்பு கடித்து உயிரை விட்டவர்கள் பற்றித்தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சீனாவிலோ பாம்பு ஒன்று ஒரு குடும்பத்தையே காப்பாற்றி இருக்கிறது. சீனாவில் உள்ள லியோனிங் எனும் மாகாணத்தில் வசித்து வரும் யூபெங் என்பவர் தனது வீட்டில் பாம்பு ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
அந்தப் பாம்பை இறக்கும் தருவாயில் கண்டெடுத்த அவர், மூலிகைகளைப் பயன்படுத்தி சுமார் 20 நாட்களாக அதற்கு தனது வீட்டில் வைத்து மருத்துவ உதவி செய்துள்ளார். பின்னர் பாம்பு பரிபூரண குணமடைந்ததும் அந்தப் பாம்பை சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் கொண்டு விட்டபோதும் அது மறுநாள் மீண்டும் அவரது வீட்டுக்கே திரும்பி வந்து விட்டதாம். சில நாட்கள் கழித்து மீண்டும் இரண்டு முறை அந்த பாம்பை காட்டுக்குள் கொண்டு சென்று விட்டபோதிலும் அப்பாம்பு இவரையே பின்தொடர்ந்து வரதொடங்கியதாம். அதிலிருந்து அவர் அந்த பாம்பை தனது வீட்டிலேயே வளர்த்து வரத்தொடங்கிவிட்டார். அதற்கு லோங் லோங் என்று பெயர் வைத்து அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நாள் இரவு அவரது வீடு தீப்பற்றிக் கொண்டபோது அவரும் அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அந்த பாம்பு இவரது முகத்தின் மீது ஏறி இவரது முகத்தில் தனது உடலால் உராய்வினை ஏற்படுத்தியதால், திடுக்கிட்டு விழித்துக்கொண்ட இவர் நிலைமையை உணர்ந்து உடனே மற்றையவர்களையும் எழுப்பி தீயில் எவரும் சிக்காமல் காப்பாற்றியதாக அவர் கூறியுள்ளார்.
இங்கு என்னுமொரு ஆச்சர்யமான விடயத்தையும் குறிப்பிட்டுள்ளார், அதாவது உறக்கத்தில் இருந்த தன்னை முதலில் எழுப்பிய பாம்பு அத்துடன் நிற்காமல் உடனே ஊர்ந்து சென்று அருகில் படுத்திருந்த தனது உறவினர் போர்த்தியிருந்த போர்வையினை தனது பற்களால் கடித்து இழுத்து அவரையும் எழுப்பியதைப்பார்த்த நான் அந்த இக்கட்டான சமயத்திலும் ஆச்சர்யத்தில் உறைந்து போனேன் என்று கூறினார்.
இந்த பாம்பு அன்று இரவு நடந்து கொண்டுது போல் முன்னர் எப்போதும் இதுமாதிரி நடந்து கொண்டதேயில்லை என்று கூறுகிறார்.
இச்சம்பவம் பற்றி விலங்கியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், பாம்புகளுக்கு மூளை கிடையாது. ஆகவே அதுகளுக்கு யோசிக்கும் திறனும் கிடையாது. நடந்த இச்சம்பவத்தை வைத்துப் பார்க்கும்போது இது உண்மையில் ஒரு ஆச்சர்யமான விடயமாகவே கருதவேண்டியுள்ளது எனத்தெரிவித்தனர்.
யூபெங் செய்த மருத்துவ உதவிக்கு பாம்பு கைமாறு செய்துள்ளதாக சர்வதேச ஆங்கில ஊடகங்கள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக