செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை தரவிறக்க உதவும் குரோம் நீட்சி

பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று கூகுள் பிளஸ் ஆகும். தற்போது அதிகளவான வாசகர்களை கொண்டுள்ளது. இதன் மூலம் நமது ஓளிப்படங்கள், காணொளிகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாறு நாம் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் ஒரு சில காணொளிகள் நமக்கு பிடித்தவையாக இருக்கும், அதிலும் ஒரு சில காணொளிகள் மிகவும் அரிதானவையாக இருக்கும்.

இவ்வாறான காணொளி மற்றும் ஒளிப்படங்களை தரவிறக்கம் செய்ய குரோம் நீட்சி ஒன்று உள்ளது.

சுட்டியில் குறிப்பிட்ட நீட்சியை இணையத்தின் உதவியுடன் குரோம் உலவியில் இணைத்துக் கொள்ளவும். பின் ஒருமுறை உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும்.

பின் உங்களுடைய கூகுள் கணக்கை திறந்து உங்களுடைய கூகுள்+ யை ஒப்பன் செய்யவும்.

அதன் பின் படம் மற்றும் வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கான ஐகான்கள் ஒவ்வொரு படம் மற்றும் வீடியோவிற்கு கீழே இருக்கும், அதை பயன்படுத்தி படம் மற்றும் வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://chrome.google.com/webstore/detail/oopphfkjddalnmmhonblampfaepcicol
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல