செவ்வாய், 31 ஜனவரி, 2012

உங்களது விருப்பமான யூடியுப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு

யூடியுப் இணையத்தளத்தில் இருக்கும் வீடியோக்களை அனைவரும் பார்ப்பதுண்டு. ஒருசில நேரங்களில் பிடித்த வீடியோக்களை தரவிறக்க செய்ய மறந்து விடுவர். இவ்வாறு பார்த்து விட்டுப் போன வீடியோக்கள் தேவைப்பட்டால் என்ன செய்வது, எங்கே பார்த்தோம் எங்கே போய் தரவிறக்கம் செய்வது என்ற குழப்பம் வரும்.

இதற்கென NirSoft வழங்கும் எளிமையான மென்பொருள் தான் Video CacheView. இந்த மென்பொருளின் மூலம் நீங்கள் ஏற்கனவே இணையத்தில் பார்க்கப்பட்ட வீடியோக்களைத் தரவிறக்கலாம்.

இணையத்தில் நீங்கள் பார்க்கும் எல்லா வீடியோக்களும் தற்காலிகமாக உங்கள் கணணியில் சேமிக்கப்பட்டுத் தான் உங்களுக்கு ஒளிபரப்பாகும். இந்த செயல் Buffering என்று சொல்லப்படும். இணையம் குறைவான கணணிகளில் வீடியோ பார்க்கும் போது Buffering என்று வருவதைப் பார்க்க முடியும்.

இவையெல்லாம் கணணியில் Temporary Folder இல் சேமிக்கப்பட்டுப் பின்னர் தான் உங்களால் பார்க்க முடிகிறது. இதனை நீங்கள் அந்த தற்காலிக முகவரியில் போய் எடுக்க முடியாது. ஏனெனில் இந்த தற்காலிக கோப்புகள் பயன்படுத்த முடியாதபடி பூட்டப்பட்டிருக்கும்.

இந்த மென்பொருளில் நீங்கள் இணையத்தில் ஏற்கனவே பார்க்கப்பட்ட Cache Video கோப்புகளை பட்டியலிடும். குறிப்பிட்ட வீடியோ தற்போது எடுக்க முடியும் படி இருந்தால் In Cache என்பதில் Yes என்று இருக்கும். அதனை வலது கிளிக் செய்து Copy Selected Files To என்பதைத் தெரிவு செய்து உங்கள் கணணியில் சேமித்துக் கொள்ளலாம்.

தற்காலிக சேமிப்பில் இல்லாதவற்றை அங்கிருந்தே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் இதில் இணையத்தில் ஏற்கனவே கேட்கப்பட்ட ஓடியோ கோப்புகளையும் தரவிறக்கிக் கொள்ளலாம்.

உங்கள் கணணியில் FLV வீடியோக்களுக்கான பிளேயர் எதேனும் நிறுவியிருந்தால் இந்த மென்பொருளிலிருந்தே அந்த வீடியோவைப் பார்க்க முடியும். VLC மீடியா பிளேயரில் பார்க்க Open with கொடுத்து தான் பார்க்க வேண்டும்.

இந்த மென்பொருள் IE, Chrome, Firefox, Opera போன்ற வலை உலவிகளில் பார்க்கப்பட்ட வீடியோக்களை ஆதரிக்கிறது.


தரவிறக்க சுட்டி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல