புதன், 25 ஏப்ரல், 2012

"ஷார்ட் கட் கீ''

ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்தியபின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் ஷிப்ட் கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

ALT+ENTER :  தேர்ந்தெடுக்கப் பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும்; இதில் பைல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ALT+F4 :  அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்;
ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான பைல் மெனு திறக்கப்படும்.


பயர்பாக்ஸ் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் சில

Alt + Left Arrow:  இணைய தளம் ஒன்றை பின்பக்கமாகத் தள்ளுகிறது. அதாவது குறிப்பிட்ட தளத்திற்கு முன் உள்ள பக்கத்திற்கு உங்களை மாற்றுகிறது.
Alt + Right Arrow:  மேலே கூறியதன் மாற்றாகச் செயல்படும்
F5: அப்போதைய டேப், பிரேம் மற்றும் இணைய தளத்தினைப் புதுப்பிக்கும்
F11: அப்போதைய இணைய தளத்தினை முழுத் திரையில் காட்ட உதவும். மீண்டும் பழைய நிலைக்குக் காட்டவும் இதனைப் பயன்படுத்தலாம்.
Esc: இறக்கப்படும் ஓர் இணைய தளத்தினை நிறுத்திவிடலாம்.
Ctrl + ( or +): இந்த கீ இணைப்பில், பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தின் டெக்ஸ்ட் எழுத்துக்கள் அளவு பெரியதாகலாம், சிறியதாகலாம். 
Ctrl + Enter:  இணைய தள முகவரி ஒன்றின் பெயர் மட்டும் கொடுத்து, இவற்றைத் தட்டினால் முழுவதுமாகக் கிடைக்கும். (.com என்பதில் முடியும் தளப் பெயர் மட்டும்) எடுத்துக்காட்டாக, http://www.tamilnet.com என்பதற்கு tamilnet என டைப் செய்து, இந்த கீகளை அழுத்தவும்.

Shift + Enter:  மேலே சொன்னபடி ".net"  என முடியும் தளங்களுக்கு இந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும் .  
Ctrl + Shift + Enter:  மேலே குறிப்பிட்டுள்ளபடி ".org" என முடியும் தளங்களுக்கு இந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும்.  
Ctrl + Shift + Del:  இந்த கீகளைப் பயன்படுத்தி Clear Data என்ற விண்டோவினைத் திறந்து, நம் பெர்சனல் டேட்டாக்களை நீக்கலாம்.  
Ctrl + D: அப்போது பயன்பாட்டில் உள்ள தளத்திற்கான புக் மார்க் ஒன்றை
ஏற்படுத்தும்.  
Ctrl + I: இருக்கின்ற அனைத்து புக்மார்க்குகளையும் காட்டும்.  
Ctrl + J: டவுண்லோட் விண்டோவினைக் காட்டும்.
Ctrl + N: புதிய பிரவுசர் விண்டோவினைத் திறக்கும்.
Ctrl + P: அப்போதைய இணையப் பக்கத்தினை அச்சிட.
Ctrl + T:  புதிய டேப் ஒன்று திறக்கப்படும்.
Ctrl + F4 or Ctrl +W: அப்போதைய டேப்பினை அப்போதைக்கு மூடும்.
Ctrl + Shift + T: அப்போது மூடப்பட்ட டேப்பில் இருந்த விண்டோவினைத் திறக்கும்.
Ctrl + Tab: திறக்கப்பட்டுள்ள ஒவ்வொரு டேப்கள் வழியாகச் செல்ல இவை
உதவும்.
Spacebar:  இணையதளப் பக்கத்தில் கீழாக ஒரு பக்கம் செல்ல இந்த கீகள் பயன்படுத்தப்படுகின்றன.
Shift + Spacebar:  இணையதளப் பக்கம் ஒன்று மேலாகச் செல்லும்.
Alt + Down arrow:  டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்த அல்லது கீழ்விரி மெனுவில் தந்த டெக்ஸ்ட் அனைத்தையும் காட்டும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல