புதன், 25 ஏப்ரல், 2012

குயிக் லாஞ்ச் பார்

குயிக் லாஞ்ச் பார் மூலம் அதிக பயன் பெறலாம். வேகமாக செயல்பட என்று தான் குயிக் லாஞ்ச் பார் (Quick Launch Bar)  என்று பெயரிட்டு விண்டோஸ் இதனை நமக்குத் தந்துள்ளது.  புரோகிராம், அப்ளிகேஷன், பைல் போன்றவற்றை, குறைவான நேரத்தில் இயக்கத்திற்குக் கொண்டு வர இந்த குயிக் லாஞ்ச் பார் பயன்படுகிறது.  டெஸ்க்டாப் அல்லது ஸ்டார்ட் மெனு, ஆல் புரோகிராம்ஸ் செல்லாமல், மேலே குறிப்பிட்டவற்றை இயக்க இது வழி தருகிறது.



 திரையின் கீழாக உள்ள, ஸ்டார்ட் பட்டைக்கு வலதுபுறமாக உள்ள, டாஸ்க் பாரில் இடது பக்கம் இந்த பார் அமைக்கப்படுகிறது. அது இல்லை என்றால், உடனே அமைத்துவிடலாம். முதலில், டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது ஆப்ஷன் மெனு ஒன்று கிடைக்கும். இதில் தரப்பட்டுள்ள ஆப்ஷன்களில் ஒன்றாக,  Quick Launch Bar  இருக்கும். இதில் கிளிக் செய்தால், ஒரு சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்தப்படும். இப்போது குயிக் லாஞ்ச் பார் கிடைக்கும். இதில் நாம் அதிகம் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஐகானை, டெஸ்க் டாப்பிலிருந்து இழுத்து இதில் விட்டுவிடலாம். இரண்டு இடங்களிலும் அந்த ஐகான் இருக்கும். குயிக் லாஞ்ச் பாரில் உள்ள ஐகானில் ஒரு கிளிக் செய்தாலே, அந்த புரோகிராம் இயக்கத்திற்கு வரும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல