புதன், 25 ஏப்ரல், 2012

ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம்

செக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.



சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்தக் கழகத்தின் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறைந்த அளவிலான செக்ஸ் ஆர்வம் மற்றும் விரக்தியுடன் கூடிய 5098 பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வை இக்கழகம் நடத்தியது. அதில், செக்ஸ் ஆர்வம் குறைவாக உள்ள பெண்களிடையே விரக்தி அதிகம் இருந்ததாம். பலருக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியே இல்லாத நிலையும் காணப்பட்டதாம்.

மேலும் தங்களால் செக்ஸ் வாழ்க்கையில் பூரணமாக ஈடுபட முடியவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் இருந்ததாம்.

இந்தப் பெண்களின் பல்வேறு குணாதிசயங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அவர்கள் கடந்த 12 மாதங்களில் செக்ஸ் விஷயத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், அந்த காலகட்டத்தில் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருந்தது. செக்ஸ் வைத்துக் கொள்ளாதபோது அவர்களிடம் விரக்தித் தன்மை எந்த அளவுக்கு இருந்தது என்பது உள்பட பல அம்சங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

ஆய்வின் முடிவில், செக்ஸ் வைத்துக் கொள்ளாத சமயங்களில் அல்லது செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த சமயங்களில் இவர்கள் பெருமளவில் விரக்தியுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தபோதெல்லாம் இவர்களுக்கு எதிர்மறையான சிந்தனைகள் அதிகம் இருந்ததாகவும் ஆய்வு கூறுகிறது.

இயல்பான செக்ஸ் வாழ்க்கை உடையவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைந்த அளவே வருவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல