புதன், 25 ஏப்ரல், 2012

அப்போதைய ஹிஸ்டரியை நீக்க

பலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரினை நீங்களும் பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் அதில் பார்த்த இணைய தள முகவரிகளை மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம்.  பயர்பாக்ஸ் பிரவுசரில் இதனை இரு வழிகளில் மேற்கொள்ளலாம். 
முதலாவதாக பிரைவேட் பிரவுசிங் என்னும் தற்போதைய வசதி மூலம், நாம் செல்லும் தளங்களின் முகவரிகள் பிரவுசரில் பதியப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.


இன்னொரு வழி, ஹிஸ்டரியில் பதிந்துள்ள முகவரிகளை அழிப்பது. 
ஆனால் அன்றைக்கு, அந்த பயன்படுத்துதலில், நீங்கள் கண்ட தளங்களை எப்படி நீக்குவது? 

பயர்பாக்ஸ் பிரவுசரில் நீங்கள் அப்போது மேற்கொண்ட தளங்கள் குறித்த தகவல்களை மட்டும் நீக்கும் வசதி தரப்பட்டுள்ளது.
  
Ctrl+Shift+Del  அழுத்துவதன் மூலம், அப்போது பயன்படுத்திய தளங்களை நீக்கும் வசதி கிடைக்கிறது.

அல்லது Tools > Clear Recent History எனச் சென்று இந்த வசதியினைப் பெறலாம்.  இந்த வழிகள் மூலம் கிடைக்கும் விண்டோவில், நீக்கப்படக் கூடிய அனைத்து தகவல் வகைகளும் கிடைக்கின்றன. இந்த தகவல்களின் மேலாகக் காட்டப்படும் நேரம், நம் வேலையை எளிதாக்குகிறது. இந்த மெனுவினைக் கீழாக இழுத்தால், கடந்த ஒரு மணி நேரத்தில், இரண்டு அல்லது நான்கு மணி நேரங்களில் என, நேரத்தினைக் கணக்கிட்டு, பார்த்த தளங்களை அழிக்கலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல