புதன், 25 ஏப்ரல், 2012

இன்டர்நெட் இணைப்பைக் காட்டும் ஐகான்

கம்ப்யூட்டர் டாஸ்க் பாரில், இன்டர்நெட் இணைப்பைக் காட்டும் ஐகான் தெரியாவிட்டால் அதனை அங்கு வரவழைக்க பின்வரும் முறையை கையாளவும்


விண்டோஸ் எக்ஸ்பியில், ஸ்டார்ட் (Start)  ஐகான் கிளிக் செய்திடுங்கள். இதில் செட்டிங்ஸ் (Settings) பிரிவு செல்லுங்கள். அதில் கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் கண்ட்ரோல் பேனல் கட்டத்தில் காட்டப்படும் ஐகான்களில், Network Connections  என்று உலக உருண்டை படத்துடன் உள்ள ஐகானில் கிளிக் செய்திடுங்கள். இப்போது நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் செட் செய்த,   இன்டர்நெட் உட்பட அனைத்து நெட்வொர்க் இணைப்புகளுக்கான ஐகான்கள் காட்டப்படும். உங்களின் இன்டர்நெட் இணைப்பு ஐகானைத் தேர்ந்தெடுங்கள். இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் General டேபினைத் தேர்ந்தெடுக்கவும். 

இதில் “Show icon in notification area when connected” என்ற வரியில் உள்ள சிறிய பாக்ஸில், டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நோட்டிபிகேஷன் ஏரியாவில், ஐகான் காட்டப்படும்.

உங்கள் சிஸ்டம் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 எனில்:

விண்டோஸ் டாஸ்க்பாரில் ரைட் மவுஸ் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில்  Properties   தேர்ந்தெடுக்கவும். இதில்  Notification Area டேபில் கிளிக் செய்திடவும். இதில் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் show or hide Clock, Volume, Network and Power  என்பதனைத் தேர்ந்தெடுங்கள். இதில்  Network   பாக்ஸில் டிக் அமைக்கவும்.  இதில் காட்டப்பட்டுள்ள மற்ற விஷயங்களைப் படித்துப் பார்த்து, நீங்கள் விரும்பினால், மேலும் சில மாற்றங்களை அமைக்கலாம்.

அடுத்து அப்ளை  (Apply)  கிளிக் செய்து, பின்  OK   கிளிக் செய்து வெளியேறவும்.  இன்டர்நெட் ஐகான் காட்டப்படாததனால், இணைய இணைப்பு கிடைக்காது என்று எண்ண வேண்டாம். அதே போல இணைய இணைப்பின் வேகம் அறிய,Free Internet Speed Test என்று ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் கொடுத்துக் கிடைக்கும் தளங்களின் மூலம், இணைய இணைப்பு வேகத்தை அறியலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல