சில நேரங்களில் சில இணைய தளங்களைப் பெற முடியாமல் போய்விடுகிறது. அதற்கு என்ன காரணமாக இருக்கும்?
இணையத்தில் இருக்கையில், ஒரு தளம் கிடைக்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.
உங்களுடைய ரௌட்டர், கம்ப்யூட்டர், பிரவுசர் என எது வேண்டுமானாலும், பிரச்னையைக் கொண்டிருக்கலாம். எனவே முதல் சோதனையாக, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்திப் பார்க்கவும். கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வது இன்னொரு நல்ல வழி. கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்தி, மோடம், ரௌட்டர் இணைப்புகளை நீக்கி, மீண்டும் இணைத்துப் பயன்படுத்திப் பார்க்கவும்.
அந்த தளத்தின் வழக்கமான முகவரி இல்லாமல், அதன் ஐ.பி. முகவரியினை எண்களில் தந்து பார்க்கவும். தளத்தின் முகவரியினை அதன் எண்களில் பெற, http://www.selfseo.com/find_ip_address_of_a_website.php என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும். இதற்குப் பின்னரும் அந்த தளம் கிடைக்கவில்லை என்றால், சற்று ரிலாக்ஸ் செய்திடவும்.
அந்த தளத்தில் தான் பிரச்னை. எனவே சில மணி நேரம் கழித்து முயற்சிக்கவும். இப்போதும் கிடைக்கவில்லை என்றால், இன்னொரு கம்ப்யூட்டர் மூலமாக முயற்சிக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக