ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

நிம்மதியான தூக்கத்திற்கு.....

நமக்கு நிம்மதியான தூக்கம் வேண்டின் பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. உறங்க செல்வதற்கு முன்பு 4 மணி நேரத்துக்குள் டீ, தேநீர், மது, புகை பிடிக்கக் கூடாது.

2. தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதைச் செய்யக் கூடாது.

3. தினமும் யோகா, தியானம் செய்வது நல்லது.

4. மதியம் தூங்கி பழகி யவர்கள் 20 முதல் 30 நிமிடங்களே தூங்க வேண்டும்.

5. தூங்குவதற்கு முன்பு மனதை அமைதியாக்கி தயார் படுத்திக் கொள்ளவும். இதற்காக உறவினர்களுடன், நண்பர்களுடன் பேசி, ஜhலியாக இருக்கலாம். அத்துடன் டிவி, கணினி, நெட், மெயில் என்று மனதை சந்தோ'மாக வைத்துக்கொள்ளலாம்.

6. தூங்கச் செல்லும் முன் குளிர்ந்த நீரால் உடலை கழுவலாம்.

7. பால் குடிப்பது நல்லது. அதில் உள்ள சத்துப்பொருட்கள் தூக்கத்தை வரவழைக்கும்.

8. படுக்கை அறை காற்றோட்டமாகவும், சத்தமில்லாத அமைதியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

9. படுக்கும் அறையில் வேறு பொருட்கள் இருக்கக் கூடாது. நனைந்த உடைகள், உள்ளாடைகள் படுக்கை அறையில் இருக்கக் கூடாது.

10 படுக்கும் அறையில் இரவு பல்புகள் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.

11. தூங்கும் அறை இருட்டாகவும், வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வராமலும் இருக்க வேண்டும்.

12. படுக்கை அறையில் இதமான குளிர் இருப்பது அவசியம். சு+டாக இருக்கக் கூடாது.

13. தூங்கும் அறையில் சத்தம் கூடாது. சத்தம் கேட்டபடி தூங்கினால் நல்லதல்ல. படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் அதிக வேகம் வேண்டாம். மிதமாக சுற்றினால் சீரான தூக்கம் வரும்.

14. படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருப்பது அவசியம்.

15. தலையணை மற்றும் படுக்கைகள் மென்மையாக இருக்க வேண்டும்.

16. மல்லாந்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் தலையணையை பயன்படுத்த வேண்டாம்.

17. தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கையில் படுக்க வேண்டும். உறக்கம் வரவில்லை என்றால் உடனே எழுந்து சென்று வேறு வேலைகளை பார்க்கலாம்.

18. நள்ளிரவில் விழிப்பு வந்தால் மனதை அமைதி யாக்கி இரவை ரசிக்க ஆரம்பித்தால் சீக்கிரமே தூக்கம் வந்துவிடும்.

19. படுத்தபடியே பார்க்கும் விதத்தில் சுவர் கடிகாரமோ, டிவியோ வைக்கக் கூடாது.

20. விடுமுறை நாட்களில் ஓய்வு என்ற பெயரில் பகலில் தூங்குவது கூடாது.

21. ஒருநாள் சரியாக தூக்கமில்லாமல் இருந்தால் அதற்காக கவலை வேண்டாம். அதை நமது உடல் தானாகவே ஏற்றுக்கொள்ளும்.

22. படுக்கையில் தூக்கம், செக்ஸ் இரண்டை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல