ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

GIGABYTE Ultra Durable™ 4 Classic motherboard

GIGABYTE Motherboard உற்பத்திகள் மற்றும் Graphic Card வகைகளின் அங்கீகார அனுமதியைக் கொண்டுள்ள விநியோகத்தர்களான PC House நிறுவனத்தினர் உள்நாட்டுச் சந்தையில் அதியுச்ச பெறுபேற்றுத்திறனைக் கொண்டுள்ள motherboard உற்பத்திகளான GIGABYTE Ultra Durable™ 4 Classic உற்பத்தி வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

Intel® H61 Express Chipset இல் அறிமுகமாகின்ற GIGABYTE Ultra Durable™ 4 Classic motherboard உற்பத்திகளில் உள்ள வியக்கவைக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் PC கணினிகளை ஈர்ப்பதன் மற்றும் ஈரம், நிலையான மின் வெளியேற்றம், சடுதியான மின்வலு இழப்பு மற்றும் உயர்ந்த தொழிற்பாட்டு வெப்பநிலை அடங்கலாக வழமையாக நாம் அன்றாடம் முகங்கொடுக்கின்ற ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன.

தினசரி அடிப்படையில் பாவனையாளர்கள் முகங்கொடுத்துவருகின்ற வழமையானசெயலிழப்பு ஆபத்துக்களைத் தடுக்கும் வண்ணம் உட்கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ள சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட GIGABYTE Ultra Durable™ 4 Classic motherboard Ultra Durable™ 4 Classic motherboard உற்பத்திகள் எமது வாடிக்கையாளர்களின் PC கணினிகளுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை அளிக்கின்றன என GIGABYTE இன் இலங்கைக்கான முகாமையாளரான அலன் சூ குறிப்பிட்டார்.

ஈரப்பதனை அகற்றுகின்ற கண்ணாடி கட்டுமானத்தில் அச்சிடப்பட்ட சுற்றுப் பலகைத் தொழில்நுட்பம் (Glass Fabric Printed Circuit Technology) எனப்படுகின்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தை உள்ளிணைப்புச் செய்தவாறு இப்புதிய motherboard உற்பத்திகள் ஈரப்பதன் மற்றும் நீராவித்தன்மை கொண்ட சூழ்நிலைகள் காரணமாக ஏற்படுகின்ற தொகுதி செயலிழப்பு மற்றும் குறைந்த மின்னோட்டம் ஆகியவற்றிலிருந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கின்றன. பாரம்பரிய IC களுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு வரையான ESD தடுப்பு மட்டங்களைக் கொண்டுள்ள உயர் தரத்திலான IC motherboard உற்பத்திகள் ஓட்ட அசைவற்ற நிலையான மின்னோட்டத்தினால் ஏற்படக்கூடிய பொதுவான சேதங்களிலிருந்து motherboard மற்றும் அதன் பாகங்கள் மற்றும் PC கணினிகளுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கின்றன.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல