ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

தக்காளி ரசம் செய்வதெப்படி

ஒரு பங்கு மிளகு, அதே அளவு சீரகம், இரண்டு பங்கு பூண்டுப்பற்கள், இரண்டு பங்கு கொத்தமல்லி விதைகள் (தனியா) இவற்றை ஒரே ஒரு சிறிய காய்ந்த மிளகாயுடன் சேர்த்து மிக்ஸியில் இட்டு மையாக இல்லாமல் கொஞ்சம் அரைகுறையாக அரைத்துக் கொள்ளுங்கள்.

முன்னதாக பத்து நிமிடங்களுக்கு முன்னரே ஊற வைத்திருந்த புளியை ஒரு கப் தேறுமளவுக்கு கரைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கரைசல் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். தனியே வைத்துக்கொள்ளுங்கள், பின்னர் சர்க்கரை சேர்த்துப் பானகமாக அருந்தலாம். மேலும் இரண்டு பழுத்த தக்காளிகளை வெந்நீரில் போட்டு அதன் தோலை நைஸாக உரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது வாணலியை சுடவைத்து சிறிது எண்ணைவிட்டு காய்ந்தபின் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையைப் போட்டு தாளிதத்துடன் ஆரம்பித்துவிடுங்கள். இப்போது தீயை சிறிது குறைத்துக்கொண்டு மிளகு அரைசலை போடு வதக்குங்கள். ஜாக்கிரதை இந்தக்காரியங்கள் அனைத்துமே கவனமாக வேகமாக நிகழ வேண்டும்.

இப்போது உரித்து வைத்த தக்காளிகளை நறுக்கிவிடாமல் கையினாலேயே நசுக்கி வாணலியில் போடுங்கள். உடன் புளிக்கரைசலையும் டப்பென ஊற்றுங்கள். ‘சுரீரென’ புகையுடன் சத்தமெழும்பும். பயம் வேண்டாம். தீயை மிதப்படுத்திவிட்டு சரியான அளவு உப்பையும், காயத்தூளையும், மிக மிக குறைவாக போட்டோம் என்ற பெயருக்கு சிறிது மஞ்சள் தூளையும் போட்டு கலக்கி விடுங்கள். இப்போது சிறிது கொத்தமல்லி இதழ்களை தூவிடுங்கள். காரியமெல்லாம் முடிந்துவிட்டது, இப்போது அடுப்பையே கவனமாக பார்த்துக்கொண்டிருங்கள். ஒரே கொதிதான். கொதி வந்தவுடன் உடனே வாணலியை இறக்கிவைத்து சரியான அளவு தட்டை வைத்து இறுக்கமாக மூடிவைத்து விடுங்கள். சரியாக 5 நிமிடங்கள்தான்..
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல