மதர்போர்ட் (Motherboard):
பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.
டயலாக் பாக்ஸ்:
விண்டோஸ் பயன்பாட்டில் ஏதேனும் ஒன்றை செட் செய்திட முயற்சிக்கையில் என்ன என்ன வசதிகள் எங்கு உள்ளன என்று காட்டி நம்முடைய விருப்பத்தினைப் பெற்று செட் செய்திட அமைக்கும் விண்டோ.
புக்மார்க் (Bookmark):
நாம் அடிக்கடி பயன்படுத்தப்படும் இணைய தள முகவரியினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் குறித்து வைப்பதனை இந்த பெயர் குறிப்பிடுகிறது. இதுவே இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பேவரிட்ஸ் (Favourites) என அழைக்கப்படுகிறது. நாம் படிக்கின்ற புத்தகம் ஒன்றில், நாம் பின்னர் ஒரு பக்கத்தினை எளிதாகத் திறக்க, சிறிய காகிதத்துண்டு, புத்தகத்திலேயே இதற்கெனத் தரப்பட்டுள்ள அழகான நூல் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம் அல்லவா; அது போலத்தான் இதுவும்.
Event Handler:
ஒரு செயல்பாட்டினைத் தூண்டும் இன்னொரு செயல்பாடு. ஒரு பட்டனில் மவுஸ் கர்சரை அழுத்திவிடுகையில் அடுத்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறதல்லவா! அந்த அழுத்தும் செயலின் பின்னணியே Event Handler என அழைக்கப்படுகிறது.
Quicktime:
ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மல்ட்டி மீடியா புரோகிராம். இதன் மூலம் மல்ட்டி மீடியா (ஆடியோ மற்றும் வீடியோ) உருவாக்கவும், இயக்கிப் பார்க்கவும் எடிட் செய்திடவும் முடியும். இன்டர்நெட்டில் இந்த புரோகிராம் மட்டுமே இயக்க முடியும் பைல்களை நீங்கள் கிளிக் செய்தால், இந்த ஆட்ஆன் புரோகிராம் வேண்டும் என்றும் அதன் தளத்திலிருந்து இறக்கிப் பதியவா என்றும் உங்கள் பிரவுசர் கேட்கும். இந்த புரோகிராமினை ஏற்கனவே பதிந்து வைத்திருந்து, அதற்குப் பின் புதியதாக அது மேம்படுத்தப்பட்டு இருந்தால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராமினை மேம்படுத்தவா என்றும் உங்கள் பிரவுசரில் செய்தி கிடைக்கும்.
எச்.டி.எம்.எல். (HTML) டாக்குமெண்ட்:
எச்.டி.எம்.எல்.(HTML) என்பதனை விரித்தால் Hyper Text Markup Language என வரும். தொழில் நுட்ப ரீதியில் சொல்வதென்றால் இது வெப் பக்கங்களுக்கான புரோகிராமிங் மொழி என்று கூட கூறலாம். (உண்மையில் இது புரோகிராமிங் மொழி அல்ல.) சுருக்கமாகச் சொல்வதென்றால் இது ஓர் வெப் பேஜ் என்று சொல்லப்படும் இணைய தளம் ஆகும். வெப்பேஜ் என்பது இன்னொரு வகையான டாகுமெண்ட். இந்த டாகுமெண்ட் ஒரு குறிப்பிட்ட வகையில் உங்கள் வெப் பிரவுசர் படித்து உணரும் படி எழுதப்பட்டிருக்கும்.
வால்பேப்பர்(Wall Paper):
விண்டோஸ் டெஸ்க் டாப்பிற்கு பேக் கிரவுண்ட் படமாகப் பயன்படுத்தப்படும் இமேஜ். இதன் மூலம் கம்ப்யூட்டர் சொந்தக்காரர் எப்படிப்பட்ட ரசனை உள்ளவர் என அறியலாம். இதில் நிலையான படங்கள் மட்டுமின்றி அசையும் அனிமேஷன் படங்களும் உள்ளன.
ட்ராக் அண்ட் ட்ராப்(Drag and Drop):
பைல் அல்லது புரோகிராமிற்கான ஐகானில் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்து இன்னொரு போல்டர் அல்லது இடத்தில் விடும் செயல்பாட்டினை இவ்வாறு அழைக்கிறோம்.
Windows:
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.
Web Browser:
(வெப் பிரவுசர்) இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அடிப்படைத் தேவையான இயக்கத் தொகுப்பு எனலாம். இதன் வழியே இணையத்தில் உள்ள பக்கங்களைப் பெற்று பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், ஆப்பரா போன்ற பிரவுசர்கள் இன்று பிரபலமாய்ப் பயன்படுத்தப்படுகின்றன.
யு.எஸ்.பி. (USB):
வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை அதனுடன் இணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட வழி. இதன் மூலம் மெமரி டிரைவ், ஹார்ட் டிஸ்க், கேமரா, மொபைல், பிரிண்டர், கீ போர்டு எனக் கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டிய எந்த சாதனத்தையும் இணைக்கலாம்.
தம்ப் நெயில் (Thumbnail):
பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன படம் என அறிய முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக