ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள்


லாப் டாப் களில் வை-பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆண்மை மற்றும் பெண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லாப் டாப்ப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடும் பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு ஏற்பட்டதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லாப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது.அதிலும் எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லாப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப இதனை ஏராளமானோர் மடியில் வைத்தே உபயோகிக்கின்றனர்.

இவ்வாறு லாட் டாப் அலைஸ் மடிக் கணினிகளை மடியில் வைத்து உபயோகிப்பது ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் மடிக்கணினிகளை உபயோகிக்கும் போது வை-பை இணையதளத்தையும் வைத்து உபயோகிக்கின்றனர்.இதனால் எழும் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணுவும் பெண்கள் கருமுட்டையும் பாதிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து அதை உறுதிப் படுத்தியும் காட்டியுள்ளனர்.
இது குறித்து பல ஆண்கள் மற்றும் பெண்கள் பரிசோதனைக் குட்படுத்தப்பட்டனர். அப்போது வை-பை இல்லாமல் மடிக்கணினியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது அவர்களின் விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்தது. அதேசமயம் லேப் டாப்பில் வை-பையை இணைத்து உபயோகித்தபோதே அவர்களின் விந்தணு மோசமாக பாதிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது.

இதற்குக் காரணம் வை-பையில் இருந்து எழும் மின்காந்த கதிர்வீச்சுதான் என்று தெரியவந்தது. இந்த கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியம் குறைவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே வை-பை இணைப்போடு லாப் டாப் உபயோகிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத் தன்மை ஏற்படுவதால் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அந்த ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் செல்போன் மற்றும் டேப்லட் வழியாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் ஆண்களோ / பெண்களோ எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அள்வுக்கதிகமான ஆல்ஹகால் வழக்கமும் ,வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஏற்கனவே ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல