ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் எழுத்தின் அளவை, குறைக்க, பெரிதாக்க...

முதலில் எந்த டெக்ஸ்ட்டின் அளவைக் குறைக்க முடியுமோ அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் கண்ட்ரோல் +ஸ்குயர் பிராக்கட் அடையாளத்திற்கான கீகளை (Ctrl+] / Ctrl+[) அழுத்தவும். முதலில் தரப்பட்டுள்ளது, எழுத்தின் அளவை அதிகரிக்கும்; அடுத்தது குறைக்கும்.

ஒவ்வொருமுறை அழுத்தும் போதும் ஒரு பாய்ண்ட் அளவு மாறுபடும். இதற்கென பாண்ட் கட்டம், மற்றும் அதன் சைஸ் கட்டம் செல்ல வேண்டியதில்லை. ஆனால், நீங்கள் விரும்பியபடி 0.5 என்ற அளவில் மாற்றம் தேவை எனில், பாண்ட் கட்டத்தில் கர்சரைக் கொண்டு சென்றும் ஏற்படுத்த முடியாது. 12.5 என அளவிற்கான கட்டத்தில் கொடுத்தால், Not a valid number என்று செய்தி கிடைக்கும். இதனை மேற்கொள்ள, பார்மட் மெனுவில் பாண்ட் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வேண்டும்.

கிடைக்கும் பாண்ட் டயலாக் பாக்ஸில், பாண்ட் அளவிற்கான கட்டத்தில் 12.5 எனக் கொடுத்தால், அதற்கேற்ற அளவில் எழுத்துக்கள் அமைக்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால், முதலில் இந்த அளவு கட்டத்தில், 12.5 என்று கொடுத்த போது ஏற்றுக் கொள்ளாத வேர்ட் புரோகிராம், மேலே காட்டியபடி பாண்ட் அளவினை மாற்றிய பின்னர், அளவு கட்டத்தில் 12.5 எனக் காட்டும். நாமாகக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளாது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல