வெள்ளி, 12 அக்டோபர், 2012

பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்களின் மரணத்துக்கு பிரபாகரன்தான் காரணம் என்பதை எரிக் சோல்ஹெயிம் 30 வருடங்கள் கடந்தே உணர்ந்துள்ளார்

பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்களின் மரணத்துக்கு பிரபாகரன்தான் காரணம் என்பதை எரிக் சோல்ஹெயிம் 30 வருடங்கள் கடந்தே உணர்ந்துள்ளார். ஆனால் எமது இராணுவத்தினரும் இராணுவத் தளபதியூம் இவரைப் பற்றி ஏற்கெனவே நன்கு உணர்ந்திருந்தனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு இன்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோது பி.பி.சி. உலக சேவைக்கு எரிக்சோல்ஹெயிம் வழங்கிய பேட்டி குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதல் அளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எமது நாடு தொடர்பான கரிசணை எமது இலங்கை மக்களை விட எரிக் சொல்ஹெயிமுக்கு இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. எனவே சொல்ஹெயிமின் கூற்று அர்த்தமற்றது.

ஏனெனில் இலங்கை மக்களுக்கு பிரபாகரன் பற்றியும் சமாதான ஒப்பந்தம் பற்றியும் சமாதான காலப்பிரில் புலிகள் நடந்துகொண்ட விதங்கள் பற்றியும் நல்ல அனுபவம் உண்டு. எனவே இதுபற்றி மேலும் தெளிவுபடுத்த வேண்டிய தேவையில்லை என நினைக்கிறேன் எனவும் அமைச்சர் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல