வெள்ளி, 12 அக்டோபர், 2012

நடிகை கெளசல்யாவுக்கு என்ன கொடுக்கப் போகிறார் நித்தியானந்தா?

நடிகை ரஞ்சிதா பாணியில் நித்தியானந்தாவிடம் சரணடைந்துள்ள நடிகை கெளசல்யாவுக்கு நித்தியானந்தா ஏதோ பதவி ஒன்றைக் கொடுக்கப் போவதாக கூறி வருகின்றனர். அனேகமாக அவருக்கு முதன்மை சீடர் என்ற அந்தஸ்தை நித்தியானந்தா கொடுத்துக் கெளரவிப்பார் என்று தெரிகிறது.

நித்தியானந்தாவிடம் நடிகர்களை விட நடிகைகள்தான் நிறையப் பேர் பரம ஆதரவாளர்களாக உள்ளனர். ரஞ்சிதா, ராகசுதா, மாளவிகா என்று பலர் நித்தியானந்தா மீது அதிக பாசத்துடன் உள்ளனர். இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்து கொண்டவர் கெளசல்யா.

தமிழில் ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். நேருக்கு நேர் படத்தில் விஜய், சூர்யாவுடன் இணைந்து நடித்தார். கடைசியாக சந்தோஷம் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவியின் அக்காள் வேடத்தில் நடித்தார்.

கடந்த 3 வருடமாக இவர் நடிப்பதில்லை. சொந்த ஊரான பெங்களூரிலேயே செட்டிலாகி விட்டார். இவருக்கு இப்போது 32 வயதாகி விட்டது. தீராத முதுகு வலியால் ரொம்பக் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் நித்தியானந்தாவிடம் போனார். அவர் தனக்குத் தெரிந்த ஹீலிங் சிகிச்சை மூலம் கெளசல்யாவின் முதுகை நன்றாக நீவி விட்டு குணப்படுத்தினார். இதனால் பரிபூரண சந்தோஷமடைந்த கெளசல்யா, நித்தியானந்தாவின் தீவிர ஆதரவாளராக மாறி விட்டார். அடிக்கடி பெங்களூர் ஆசிரமம் பக்கம் கெளசல்யாவைக் காண முடிந்தது.

இப்போதும் அவர் ஆசிரமத்தில்தான் பெரும்பாலும் தங்கியிருக்கிறார். தியானம், யோகா என பிசியாக இருக்கிறார். அவரது சேவை, அர்ப்பணிப்பு உணர்வை மெச்சி அவருக்கு முதன்மை சீடர் என்ற அந்தஸ்தைக் கொடுக்க நித்தியானந்தா திட்டமிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல