தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1998 ஆம் செப்டெம்பர் 28 ஆம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானத்தின் பாகங்களை மீட்கின்ற நடவடிக்கையில் கடல் படையினர் தற்போது மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.
இவ்விமானம் பலாலி விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டு இருந்தது. விமானம் புறப்பட்டு 10 நிமிடங்கள்தான் இருந்து இருக்கும். இரணைமடுவுக்கு மேலாக பயணித்தபோது சுட்டு வீழ்த்தி விட்டார்கள்.
விமானத்தில் 48 ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை ஆகிய பயணிகளும், உக்ரைய்ன் நாட்டவர் இருவர் உட்பட 06 விமானிகளும் பயணித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். அநேகர் தமிழர்கள் ஆவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏவுகணைப் படைப் பிரிவுதான். இத்தாக்குதலை இரணைமடுவில் இருந்து நடத்த நான்கு நிபுணர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். யுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இவர்களில் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.
இவரிடம் நடத்திய விசாரணைகளில்தான் இத்தாக்குதல் குறித்த பல விடயங்கள் பொலிஸாருக்கு தெரிய வந்து உள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுக்கு மிக நெருக்கமான தளபதிகளில் ஒருவரான கடாபி என்பவர்தான் இப்பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டு இருந்தார் என்று தெரிய வந்து உள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கடாபி கொல்லப்பட்டு விட்டார்.
பிடிக்கப்பட்டு இருக்கின்ற புலி நிபுணர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இரணைமடுத் தீவில் இவ்விமானத்தின் சிதைவுகளை கடல் படையினர் குழு ஒன்று கடந்த 02 ஆம் திகதி சல்லடை போட்டுத் தேடியது.
இப்பகீரத முயற்சியில் விமானத்தின் இரு இறக்கைகள், மூன்று ரயர்கள், எஞ்சின், விமானத்தின் முன் பாகம் ஆகியவற்றை அடையாளம் கண்டு உள்ளது.
இவற்றை மீட்கின்றமைக்கான சாத்தியக் கூறுகள் குறித்து கடல் படை தீவிரமாக ஆராந்து வருகின்றது. இவற்றை மீட்கின்றமைக்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்ற பட்சத்தில் அடுத்த இரு வாரங்களுக்கு இடையில் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என கடல் படை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப் பாதை 1990 ஆம் ஆண்டு முடக்கப்பட்டதில் இருந்து விமானம், கப்பல் ஆகியவற்றிலேயே பொதுமக்கள் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்கள்,
புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரே ஒரு பயணிகள் விமானம் இதுவே ஆகும். கொல்லப்பட்டவர்களில் ஒரு தொகையினர் இரணைமடுவில் புதைக்கப்பட்டார்கள் என்று நம்பப்படுகின்றது.
யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப் பாதையை 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புலிகளிடம் இருந்து இராணுவம் மீட்டெடுத்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக