வெளிநாட்டு புலி ஆதரவு தமிழர்களில் ஒரு பிரிவினர் முன்வைத்த கோரிக்கையை இளையராஜா நிராகரித்தார். திட்டமிட்டபடி நவம்பர் மாதம் அவரது பிரமாண்ட இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. நவம்பர் மாதம் புலிகளின் மாவீரர் தினம் வருவதால் அந்த மாதத்தில் ஆடம்பர நிகழ்ச்சிகள் எதையும் வைத்துக் கொள்வதில்லை. முள்ளிவாய்க்கால் முன்புவரை இலங்கையில் மட்டுமே நவம்பர் மாதம் ஆடம்பர நிகழ்ச்சிகள் நடக்காமலிருந்தன. தமிழகத்தில் அதனை யாரும் கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் நவம்பர் மாதத்தில் எந்த நல்ல நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என்ற எண்ணம் உலகம் முழுவதும் வாழும் புலி களிடையே தோன்றியிருக்கிறது.
சில அமைப்புகளும், புலிகளின் ஆதரவு ஒரு பிரிவினரும் இதனை ஒரு கட்டாயமாக திணிக்க முயல்கின்றனர். அதன் வெளிப்பாடாக கனடாவில் நடக்கும் தனது இசை நிகழ்ச்சி குறித்த அறிமுக கூட்டத்திற்கு வந்த இளையராஜாவுக்கு எதிராக நாம் புலி ஆதரவு தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இயக்குனர் ஆர்.கே.செல்வமணியும் அறிக்கை வெளியிட்டார்.
இசை, ஆன்மீகம் தவிர்த்து இளையராஜா பெரிதாக எதிலும் அக்கறை செலுத்தியதில்லை. அவர் இந்த கோரிக்கைக்கு செவி சாய்ப்பார் என்று எண்ணுவதே அபத்தம். ஆர்ப்பாட்டமான நிகழ்ச்சிகள் நடத்துவதோ, நடத்தாமலிருப்பதோ அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் சார்ந்தது. அதனை கட்டாயமாகத் திணிப்பது ஒருவகையான பாசிசம். சோகத்தை கோஷம் போட்டு ஒருவரிடத்தில் புகுத்த இயலாது. அதுவும் இளையராஜாவிடம் அதனை எதிர்பார்ப்பது அபத்தம் என்றே சொல்ல வேண்டும்.
திட்டமிட்டபடி நவம்பர் 3ஆம் தேதி கனடா தலைநகர் டொரண்டோவிலும், நவம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவிலும் இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகள் நடக்கயிருக்கின்றன. இளையராஜாவின் வாரிசுகளுடன் யேசுதாஸ் போன்ற மூத்த பாடகர்களும், கார்த்திக் போன்ற இளைய தலைமுறையும் கலந்து கொள்கிறார்கள். நவம்பர் மாதத்தில் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள் நடத்தாமலிருப்பது நல்லது. மீறி ஒருவர் அதற்கு துணியும் போது அவரது சுதந்திரம் என எடுத்துக் கொள்வதே நியாயமானது. இசை நிகழ்ச்சியை முடக்க பல்வேறு புலி ஆதரவு அமைப்புகள் தீவிரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக