வெள்ளி, 12 அக்டோபர், 2012

இந்தியாவில் இனி 'மேதகு' இல்லை

ஜனாதிபதியை அழைக்கும் முறையில் வெள்ளையர் கால மரபுகளை கைவிடுவதற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தீர்மானித்துள்ளார். அதன் படி ஜனாதிபதி மற்றும் ஆளுநர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்போரை அழைக்கும் போது 'மேதகு' எனும் வார்த்தை கைவிடப்படுகிறது.

மேலும் உள்நாட்டு நிகழ்ச்சிகளில், உள்நாட்டு தலைவர்களுடனான சந்திப்புக்களின் போதும் இந்த வார்த்தை பயன்படுத்துவது நிறுத்தப்படுகிறது. எனினும் இது சர்வதேச சம்பிரதாய வார்த்தையாக தொடர்ந்து இருப்பதால், வெளிநாட்டு தலைவர்களுடனான சதிப்பின் போது மட்டும் அதை பயன்படுத்திக்கொள்ளும் முறை நீடிக்கவுள்ளது.

அதேபோன்று ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இந்தியில் 'மகாமின்' எனும் வார்த்தைக்கு பதிலாக 'ராஷ்டிரபதி மகோதாய்' அல்லது 'ராஷ்டிரபதி ஜி' எனும் வார்த்தை பயன்படுத்த முடிவாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அரச குறிப்புக்களில் இனி இந்த வார்த்தை பயன்படுத்தப்படும். மேலும் ஜனாதிபதியை மாண்புமிகு, அல்லது ஸ்ரீP, ஸ்ரீமதி என்றோ இனி அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முடிவுகள், மேல்நடவடிக்கைக்காக இந்திய மத்திய உள்விவகார அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தையும், பொலிஸாருக்கு ஏற்படும் சுமையையும் குறைப்பதற்காக, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கூடுமானவரை ஜனாதிபதி மாளிகையிலேயே நடத்துமாறும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல