யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பில் பல்வேறு ஊகங்களும் விசாரணைகளும் இடம்பெற்ற போதிலும் அதன் சூத்திரதாரிகள் யார் என்பதில் தொடர்ச்சியான குழப்பமே நிலவி வந்தது. அல்லது தற்போதும் நிலவி வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பில் படை அதிகாரிகள் உட்பட பல அரச ஊழியர்களும் கொல்லப்பட்டனர். தங்களது மாநகர சபையிலேயே ஒரு ஊழியராக பணியாற்றியவாறு புலிகளுக்கு தகவல் வழங்கியபடி ஒருவர் இருக்கிறார் என்பதை யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. தங்களிடையேதான் இருக்கிறார் அவர் என எவருமே எண்ணியிருக்க மாட்டார்கள்.
அரச சம்பளத்தைப் பெற்றவாறு அரச பணியை பகுதிநேரமாக ஆற்றிக்கொண்டு மேலதிகாரிகளை தனது ஊடக வல்லமையாலும் புலிகளின் சாயத்தைப் பூசியவாறும், அச்சுறுத்தியபடி முழுநேரமாக புலிகளுக்குரிய ஊடகப்பணியை ஆற்றிய பல ஊடகவியலாளர்களுள் இவரும் ஒருவர். யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட நிமல்ராஜனுடன் இணைந்து புலிகளிற்குரிய வேலைத்திட்டத்தை முழுமையாக முன்னெடுத்துச் சென்ற இந்த ஊடகவியலாளர் யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்குரிய முழுமையான தகவல்களை புலிகளிற்கு வழங்கியிருந்தார். இதன் காரணமாக புலிகளின் உளவுத்துறைத் தலைவர் பொட்டம்மானால் கௌரவிக்கப்பட்ட இந்த ஊடகவியலாளர் தன்னை தனியார் வானொலி ஒன்றில் செய்தியாளர் என அறிமுகப்படுத்தி வந்தார்.
இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசநிர்வாகத்தை ஆட்டம்காணச் செய்து கொண்டிருந்தவர் விடுதலைப்புலிகளின் யாழ்மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தூயவன் என்பவராவார். இவர் யாழ்ப்பாணத்தில் படையினர்பரவலாக மூலைமுடுக்குகளெல்லாம் நிறைந்திருந்தபோதிலும் படையினரது கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு சாதுரியமாக யாழ்ப்பாணத்தில் தனது அரசியல் பணிகளை முன்னெடுத்துவந்தார். குறிப்பாக யாழ்மாவட்ட அரச செயலகத்தை செயலிழக்க செய்ததிலிருந்து பல்வேறு அரசதிணைக்களங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
ஒரு கடிதத்தில் எல்லாளன்படை அல்லது யாழ்மாவட்ட அரசியல் துறைச்செயலகம் என்று இவர் அனுப்பும் கடிதங்கள் அன்றைய நாட்களில் அரச அதிகாரிகளுக்கு பெரும்பயத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இவரது செயற்பாடுகள் சாவகச்சேரி மற்றும் புங்குடுதீவு பகுதிகளிலேயே கூடுதலாக இருந்தது.
இந்தநிலையில் புங்குடுதீவில் இருந்தவாறு இந்த ஊடகவியலாளருடன் தொடர்புகொண்ட தூயவன் புங்குடுதீவுப்பகுதிக்கு சந்திப்பு ஒன்றிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பை ஏற்று இவரும் புங்குடுதீவுப்பகுதிக்குச் சென்றிருந்தார்.
பல்வேறுவிடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடிய தூயவன் இறுதியாக இவர் தனது பிள்ளையின்பிறந்தநாள் தொடர்பில் கூற முற்பட்டபொழுது, இவ்விடயம் தொடர்பாக வேதங்களை முக்கியமாக சந்திக்குமாறு தலைமைச் செயலகம் பணித்திருந்தது.
உங்களுக்கு இராணுவத்தளபதி பரிசுகளை வழங்கியிருக்கின்ற போதிலும்நாங்களும் ஒருவித்தியாசமான பரிசு ஒன்றை உங்களிற்கு வழங்கப்போகிறோம் எனக்கூறி தனது இடுப்பில் மாட்டியிருந்த மைக்ரோவகைபிஸ்ரலை எடுத்து மேசையில் வைத்தவுடன் பத்திரிகாசிரியர் படபடத்துப்போய்விட்டார்.
உடனடியாகவே பிஸ்ரலில் இருந்த மகசீனை உருவி அதற்குள் இருந்த சன்னங்களில் ஒன்றைக் கழற்றி அவரது சட்டைப்பைக்குள் திடீரெனப் போட்ட தூயவன் இதுதான் உங்களுடைய நடவடிக்கைகள் பிழைத்தால் நாங்கள் தரும் பரிசாக இருக்கும் என எச்சரித்தார். இதனை அடுத்து ஊடகவியலாளர் தான் படை அதிகாரிகளுடன் இனி வரும் நாட்களில் கேளிக்கை நிகழ்வுகளில் கலந்து கொள்ளமாட்டேன் என வாக்குறுதி அளித்தார். இவ்விடயம் உடனடியாகவே தலைமைச் செயலகத்திற்கு தூயவனால் புங்குடுதீவில் இருந்தவாறே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து மனமுடைந்த நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனது பத்திரிகைப் பணிமனைக்கு வந்த ஊடகவியலாளர் இரண்டு விடயங்களை உடனடியாகவே முன்னெடுத்தார். ஒன்று தூயவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற விடயம் மற்றையது அன்ரன் பாலசிங்கத்துடன் தொடர்புகொண்டு புலிகளுடன் சீரான உறவை மீண்டும் பேணமுற்படுவது என முடிவெடுத்தார். இதன் பிரகாரம் தூயவனுடைய போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் தூயவன் சந்திப்பிற்காக அழைத்தவர்கள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்த முற்பட்டார். தூயவனின் போக்குவரத்துத் தொடர்பில் துல்லியமான தகவல்களை பெற்றுக்கொண்ட அவர் இத் தகவல்களை உடனடியாகவே படையினரது புலனாய்வு அமைப்பிற்கு பொறுப்பாக இருந்த கமேஸ் என்பவரிடம் தெரியப்படுத்தியிருந்ததைப் புலிகள் பின்னர் அறிந்தனர்.
தகவல் கிடைத்த கமேஸ் உடனடியாகவே செயற்பாட்டில் இறங்கினார். இதன் பிரகாரம் தூயவன் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பொழுது தீவகப் பகுதிக்கும் குருநகர்ப் பகுதிக்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் வைத்து படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிகழ்வை அரங்கேற்றி முடித்த சாதனை குறித்த ஊடகவியலாளரையே சாரும் என்பதைப் புலிகள் கண்டுபிடித்தனர். பொட்டம்மானால் பேணப்பட்ட ஆவணத் தொகுப்பொன்றில் ஊடகவியலாளர் வித்தியாதரனுடைய இந்த நடவடிக்கை விரிவாக குறிப்பிடப்பட்டிருந்ததுடன் இதற்குரிய தண்டனையை காலம் வரும்பொழுது வழங்கவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போதே, புலனாய்வுத்துறையின் இரண்டாம் நிலைப் பொறுப்பாளர்களில் ஒருவராக செயற்பட்ட கபிலம்மான் வித்தியாதரனை உடனடியாகவே போட்டுத்தள்ளவேண்டுமென ஆத்திரமடைந்தார். தற்போதைய சூழலில் இவரைப் போடமுடியாதென சமாதானப்படுத்திய பொட்டம்மான் அதற்குரிய காலம் வரும்பொழுது கவனிப்போம் என கூறிவிட்டார். இதன்பின் அன்ரன் பாலசிங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திய ஊடகவியலாளர் பின்னர் எவ்வாறு புலிகளுடன் உறவைப் பேணினார் எவ்வாறு தொடர்ந்தும் அழிவுக்குக் கொண்டுசென்றார் என்பதை தொடர்ந்து பார்ப்போம். (தொடரும்)
(வே. அர்ச்சுணன்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக