சனி, 15 டிசம்பர், 2012

கொழும்பில் சிங்களவரை வீழ்த்திய புலிகள்!

கொழும்பு நகரத்தில் சிங்கள சனத் தொகையை குறைக்கின்றமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு செயல்பட்டு, அதில் வெற்றி கண்டு உள்ளனர் என்று திவயின வாரப் பத்திரிகை ஆய்வுச் செய்தி ஒன்றை பிரசுரித்து உள்ளது.

2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்த காலத்தில் புலிகள் இச்சதி வேலையை முன்னெடுத்தனர் என்று இப்பத்திரிகையின் பாதுகாப்பு விவகார நிருபர் கீர்த்தி வர்ணகுலசூரிய எழுதி உள்ளார்.

புலிகளின் ஆசியுடன் கனடா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளில் இயங்கி வந்த 17 நிறுவனங்கள் கொழும்பில் சிங்கள குடும்பங்களில் இருந்து காணிகளை வாங்கி, வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றன.

வெள்ளவத்தை, மோதரை, ஆமர் வீதி, தெகிவளை, போன்ற இடங்களில் பாரிய ஆடம்பர வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இவை இன்று புலம்பெயர் தமிழர்களுக்கு அல்லது வடக்கு அல்லது கிழக்குத் தமிழர்களுக்கு சொந்தமாக உள்ளன.

முதலீட்டு சபையில் புலி ஆதரவு உத்தியோகத்தர் ஒருவர் வேலை பார்த்து இருக்கின்றார். இவரும் இச்சதி வேலைக்கு மிகவும் காத்திரமான பங்களிப்பை வழங்கி இருக்கின்றார். ஆயினும் இவர் வன்னிச் சமரைத் தொடர்ந்து நாட்டை விட்டு ஓடி விட்டார்.

தற்போது கொழும்பில் 40 சதவீதமானோர் முஸ்லிம்கள், 33 சதவீதமானோர் தமிழர்கள், 24 சதவீதமானோர் சிங்களவர்கள்.

அதாவது 126, 345 முஸ்லிம்கள், 106325 தமிழர்கள், 76468 சிங்களவர்கள் தற்போது கொழும்பில் உள்ளார்கள்.

ஆனால் 1971 ஆம் ஆண்டில் 50 சதவீதமானோர் சிங்களவர்களாகவும், 24.5 சதவீதமானோர் தமிழர்களாகவும், 19 சதவீதமானோர் முஸ்லிம்களாகவும் இருந்து உள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல