வெள்ளி, 21 டிசம்பர், 2012

"என்னை காப்பாற்றுங்கள்... நான் உயிர் வாழ விரும்புகிறேன்...!"

"என்னை காப்பாற்றுங்கள்... நான் உயிர் வாழ விரும்புகிறேன்...!" என்று டெல்லியில் 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு,சிகிச்சை பெற்று வரும் மாணவி உருக்கமாக கூறியுள்ளார். மாணவியை பலாத்காரம் செய்த கும்பல் அவரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் அவரது வயிறு மற்றும் சிறுகுடல் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவரது சிறுகுடலில் நோய் தொற்று பரவிய காரணத்தால் இதுவரை 5 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட குடல் பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவருக்கு 5 சதவீத சிறுகுடல் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், இதனால் அவர் இனிமேல் எவ்வித ஆகாரமும் சாப்பிட முடியாது எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மாணவிக்கு நேற்று சிறிது நேரம் நினைவு திரும்பியது.அப்போது, தாய் மற்றும் சகோதரனை பார்த்து கண்ணீர் விட்டார்."எனக்கு வாழ ஆசையாக இருக்கிறது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்று எழுதி காட்டினார்.

சிகிச்சைக்கு குவியும் நிதியுதவி

இந்நிலையில், இம்மாணவிக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.உத்தரகாண்ட் முதல்வர் ரூ. 5 லட்சம் உதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். மருத்துவ செலவை டெல்லி அரசு ஏற்றுக் கொள்ளும் என முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயாபச்சனும் மாணவிக்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உ.பி.மாநிலத்தை சேர்ந்தவர் என்ற வகையில் முதல்வர் அகிலேஷ் யாதவும் நிதி உதவி அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல