செவ்வாய், 29 ஜனவரி, 2013

கமலை படுகுழியில் தள்ளப் பார்க்கும் தமிழ்சினிமாவின் ‘மீடியா மாஃபியா’ எம் (3M) யார்..?

‘விஸ்வரூபம்’ படம் அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து இப்போது கமலை சிக்கலில் மாட்ட வைத்திருக்கிறார் மீடியா மாஃபியா எம் என்று கமல் தரப்பால் அழைக்கப்படும் ஒரு பெரும்புள்ளி.

எந்த பிரச்சனைகளும் இல்லாமல் ரிலீஸுக்கு ரெடியாக இருந்த ‘விஸ்வரூபம்’ படம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அடுத்தடுத்த பிரச்சனைகளுக்கு காரணமே, ஒரு விதத்தில் இந்த மீடியா புள்ளிதான் முக்கியமான காரணம் என்று தெரிய வந்திருக்கிறது.

எந்த ஒரு தமிழ்சினிமாவின் பொது நிகழ்ச்சியிலும் பரவலாக பார்க்க முடியாத இந்த மனிதரை மீடியா மாஃபியா எம் என்று விபரம் தெரிந்தவர்கள் பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள்.

சேனல் ஒன்றின் நிர்வாகியான இவருக்கு ஏன் இந்த வேலை… கமலை ஏன் தொடர்ந்து சிக்கலுக்குள்ளாக்குகிறார்? கமல் அந்த அளவுக்கு இவருக்கு இடம் தருவது ஏன்? என்று கேள்விகள் எழுந்துள்ளன.

நல்லபடியாக ரிலீஸை நோக்கிப் போய்க்கொண்டிருந்த விஸ்வரூபம் விவகாரத்தில் கமலுக்கு ஆலோசனை சொல்கிறேன் என்ற பெயரில் இந்தளவுக்கு கமலை கோர்ட்-கேஸ் என்று இழுத்துவிட்டு அவரை படுகுழியில் தள்ளப் பார்க்கும் வேலைகளை கனகச்சிதமாக செய்து வருவதே இவர்தானாம்.

விஸ்வரூபம் படத்தை ரிலீஸுக்கு முன் தங்களுக்குப் போட்டுக் காட்ட வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கேட்ட போது, ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னதாக வேண்டுமானால் காட்டலாம் என்று முடிவு செய்திருந்தாராம் கமல். ஆனால் அவரை 21-ம் தேதியே படத்தை போட்டுக் காட்டி விடுங்கள் என்று வற்புறுத்தியது இந்த மீடியா மாஃபியா அதிமேதாவிகள் தானாம்.

இதில் கமல் சொன்னபடி 24-ம் தேதி மாலை படத்தைக் காட்டியிருந்தால், பெரிய அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்காமல் படம் 25-ஆம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸாகியிருக்கும். அதிகபட்சம் துப்பாக்கி விவகாரம் போல முடிந்திருக்க வேண்டிய இந்த விஷயத்தை தீவிரப்படுத்திவிட்டதாம் இவர் செய்த வேலை.

அதோடு விட்டார்களா, தியேட்டர்காரர்கள், டி.டி.ஹெச் விவகாரத்திலும் கமலுக்கு முழுக்க முழுக்க தவறாக ஆலோசனைகளை கொடுத்து அதிலும் அவரை சிக்க வைத்ததிலும் இவருடைய பங்குதான் அதிகமாம்.

அதேபோல தான் வேலை செய்யும் சேனலுக்கு விசுவாசத்தை காட்ட இந்த மீடியா மாஃபியா செய்த வேலை தான் நம்பிக்கைத் துரோகத்தின் உச்சமாகச் சொல்லப்படுகிறது.

அதாவது முதலில் இந்தப்படத்தை பெரும் விலை கொடுத்து ‘இலை’ சேனல் தான் வாங்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. ஆனால் அதன்பிறகு அதைவிட கூடுதலாக பணம் தருகிறார்கள் என்று ‘சூரிய’ டிவிக்கு கைமாற்றச் சொல்லி, அங்கும் சரியாக பேரம் படியாததால் சரி ஏதாவது ஓரளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலைக்கு கமலை கொண்டுவந்து, கிடைத்த ரேட்டுக்கு தள்ளிவிட வைத்தார் என்கிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே அவருடைய ஆலோசனைகளை கேட்டு வந்த கமலிடம் “விஸ்வரூபம் படம் இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கக் காரணமே அந்த ஆள் தான், அதனால் தயவு செய்து அவரை ஒதுக்கி வையுங்கள்” என்று அவரது நல விரும்பிகள் சொல்லியும் கூட, கமல் இன்னமும் இந்த ’3 எம்’-ஐயே நம்புகிறாராம்!

ரொம்பவே நெருடுகிறதே….!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல