கமலின் விஸ்வரூபம் அளவுக்கு சினிமாக்காரர்களுக்கு பேதி கொடுக்கும் இன்னொரு அதிர்ச்சி… ராஜகுமாரன்! நடிகை தேவயானியின் கணவரான இவர் இயக்கி நடிக்கும் “திருமதி தமிழ்” படத்தின் போஸ்டர்கள், பத்திரிகை ஸ்டில்களைப் பார்த்தவர்கள் மயங்கி விழாத குறைதான்.
“என்னதான் கணவராக இருந்தாலும் இவரை ஹீரோவாக நடிக்க வைக்க தேவயானிக்கு எப்படி துணிச்சல் வந்தது” என்று பலரும் அனுதாபப்படுகிறார்கள்.
ஆனால் கோலிவுட் பட்சிகள் சொல்வது அதிர்ச்சி ரகம்!
“தேவயானியை எல்லாரும் அப்பாவின்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க… ஆனா அந்த பொண்ணு பயங்கர கில்லாடி” என்று பட்சிகள் சொல்லச் சொல்ல…குழந்தை முகமும், கொஞசு தமிழும் (!) பேசி, அஸிஸ்டண்ட் டைரக்டரான ராஜகுமாரனை கல்யாணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி, டிவி தொடர்கள் மூலம் தமிழ் மக்களின் இதயத்தில் இடம்பெற்ற குடும்ப விளக்கு தேவயானிக்குள் இவ்வளவு “திறமையா” என்ற ஆச்சரியம்தான் ஏற்பட்டது!
தொடர்ந்து இவர் பற்றி நமக்கு பல தரப்பிலும் கிடைத்த தகவல்களை அப்படியே தருகிறோம்…
பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றிவரும் ஒருவர், “ஆரம்பத்துல, ” தொட்டாச் சிணுங்கி” படத்துல ஆபாசமா டான்ஸ் ஆடித்தான் தேவயானி அறிமுகம் ஆனாங்க. ஆனா அவங்ககிட்ட “கிளாமர்” இல்லாததால எடுபடலை. ஏதோ அப்படி இப்படி காலம் ஓடிக்கிட்டிருந்தப்பதான், “காதல் கோட்டை” படம் மெகா ஹிட் ஆனது. அதிலிருந்து நிறைய வாய்ப்புகள் வந்தன.
ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறையவும், டி.வி பக்கம் வந்தார். அவர் நடித்த “கோலங்கள்” சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து சில டி.வி. வாய்ப்புகள் வந்தன. மறுபடி இடைவெளி விழுந்தது.
இந்த நேரத்தில்தான் அவரது எழுபத்தைந்தாவதாக நடிக்கும் “திருமதி தமிழ்” பட அறிவிப்பு வந்தது. அவரே தயாரிப்பதாகவும், கணவர் ராஜகுமாரன் ஹீரோ என்றும் தகவல் வெளியானது.
அப்போதுதான் தேவயானி இவ்வளவு பெரிய ஆளா என்கிற அதிர்ச்சியும் ஆச்சரியுமாக பார்த்தது கோலிவுட்!” என்றார் அந்த மேனேஜர்.
“இத்தனை வருடங்கள் திரைப்படம், டி.வி. தொடர்களில் நடித்தவர், ஒரு படத்தைத் தயாரிப்பது பெரிய விசயமா” என்ற கேள்வி எழலாம்.
இதற்கான பதிலை, திரைப்பட பி.ஆர்.ஓ. ஒருவர் சொன்னார்: “தேவயானியும் ராஜகுமாரனும் கணவன் மனைவியாக இருக்கலாம். ஆனால் திரைப்படத்தில் இந்த ஜோடியை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா. அந்தப் படத்தில் ஸ்டில்களில் ராஜகுமாரைனைப் பார்த்து சிரித்தவர்களும், பயந்தவர்களும், எரிச்சலானவர்களுமே அதிகம். இதை நான் தேவயானியிடம் வெளிப்படையாகவே சொன்னேன். “கஸ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏன் இப்படி வீணாக செலவு செய்ய வேண்டும். வேண்டுமானால் ராஜகுமாரனை டைரக்ட் மட்டும் செய்யச் சொல்லுங்களேன்” என்றேன். இதே போல அவரது நலம் விரும்பிகள் பலரும் சொன்னார்கள்.
அதற்கு தேவயானி, “உங்கள் வேலையைப் பார்த்துககொண்டு போங்கள்” என்று சொல்லிவிட்டார்.அந்த நேரத்தில் இன்னொரு அறிவிப்பு வந்து அனைவரையும் திகிலடிக்கச் செய்தது.”வருடத்துக்கு பன்னிரண்டு படங்கள் தயாரிக்கப்போகிறோம். அத்தனையிலும் தேவயானிதான் ஹீரோயின்.ஹீரோ மட்டும் மாறுவார்” என்ற அறிவிப்புதான் அது.
இன்று சினிமா இருக்கும் நிலையில் வருடத்துக்கு ஒருபடம் தயாரித்து வெளியிடுவதே பெரிய விசயமாக இருக்கிறது. இதி்ல் 12 படமா… அதுவும் தேவயானியே நடித்து…எங்கோ உதைக்கிறதே என்று விசாரித்த போதுதான் வில்லங்கமான பல தகவல்கள் கிடைத்தன” என்றார் அந்த பி.ஆர்.ஓ.
அந்த வில்லங்க தகவல்கள் என்ன…??.
சமீபக காலமாக தேவயானிக்கு பல பெரிய இடத்துத் தொடர்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே பெ. இ. தொடர்புகள் பல இருந்தாலும், சமீபத்தியவை மகா பெரியவை!
இந்த “பெரிய மனிதர்கள்” அரசியலில் மட்டுமின்றி மிகப் பெரிய தொழில் நிறுவனங்களிலும் முதலீடு செய்திருப்பவர்கள். இவர்களிடம் கொட்டிக் கிடக்கும் கருப்புப் பணத்தை ஒயிட் ஆக்கும் வேலையைத்தான் தேவயானி செய்கிறார்.அவர் எடுக்கும் படங்களில் சைலண்ட் பார்ட்டனர்களாக சம்பந்தப்பட்ட பெரிய இடத்து மனிதர்கள் இப்பார்கள். படம் தோல்வி என்றால் கணக்கு காட்ட வசதியாகிவிடுமே. அதுதான் அவர்களது திட்டம். தவிர பட வசூல் மூலம் வந்தது என்று குறிப்பிட்ட தொகைக்கு கணக்கு காட்டும் ஐடியாவும் உண்டு.
இப்படி தேவயானியை சுற்றி இருக்கும் கருப்பு பண முதலைகள் பல நூறு கோடிக்கு இப்படி கணக்குக் காட்ட தயாராகிவிட்டார்கள்.அவர்களுக்கு உதவுவதுதான் தேவயானியின் பணி.இப்போது சொல்லுங்கள் தேவயானியோ, ராஜகுமாரனோ அப்பாவியா” என்றார் அந்த திரையுலகப் புள்ளி.
அதிர்ச்சியான நாம், இது பற்றி தேவயானியிடமே கேட்க தொடர்புகொண்டோம். அவர் வெளியூர் ஸூட்டிங் சென்றிருப்பதாக சொன்ன அவரது தரப்பினர், “தேவயானி நேர்மையான முறையில்தான் சம்பாதித்துதான் கணவருக்காக அதை செலவு செய்கிறார். மற்றபடி வேறு வில்லங்கங்கள் இல்லை” என்றார்கள்.
ஹும்..நண்டு கொழுத்தால் வளையில் தங்காது… எப்படியும் வெளியே வந்துதான் ஆக வேண்டும்…
பார்ப்போம்!
இதற்கிடையே திருமதி தமிழ் படத்தின் இரு முழுப் பாடல் உங்களுக்காக இதோ::
யாழன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக