ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரில், குடும்பத் தகராறில் குழந்தையைக் கடித்துக் குதறிய தந்தை, குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 குழந்தைகளுக்கு தந்தையான அந்த நபர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன் மனைவியிடம் தகராறு செய்வாராம். கடந்த 26-ம் தேதி போதையில் வந்த அவர் வழக்கம்போல் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது குழந்தைகள் பயத்தில் அழத் தொடங்கின.
அப்போது போதை வெறியில் இருந்த தந்தை குழந்தைகள் என்றும் பாராமல் அடித்துள்ளார். மூத்த குழந்தையை கடுமையாக அடித்த அவர், 5 மாத கைக்குழந்தையின் மூக்கு, உதடு மற்றும் கன்னத்தை கடித்துள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக