செவ்வாய், 29 ஜனவரி, 2013

கமல்ஹாசன் தலிபான் தலைவர் முல்லா ஓமரை மதுரையில் எங்கே பார்த்தார்?

“ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்று கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் கூறியுள்ளார். எனவே, முல்லா ஓமர் மதுரையில் எங்கே வசித்தார் என்பது குறித்த ஆதாரங்களை கமல்ஹாசனிடம் பெறுவதற்காக மதுரை போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்” என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த எழிலரசு சார்பில், வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

யார் இந்த முல்லா உமர்..?

யார் இந்த முல்லா உமர்.. இதென்ன புது கலாட்டா? என்று சிலர் கேட்கக் கூடும்.

முல்லா ஓமரின் முழுப் பெயர், முல்லா மொஹம்மது ஓமர். முல்லா உமர் தலிபான்களின் தலைவர். 1996 முதல் 2001 வரை இவர்தான் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் தலைவராக இருந்தார். சுப்ரீம் கவுன்சில் எனப்பட்ட ஆப்கானிஸ்தானின் அதியுயர் ஆட்சிமன்றக் குழு தலைவராகவும் தன்னை அறிவித்துக் கொண்டார்.

அல்கொய்தா நடவடிக்கைகள், அதன் தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவும் அடைக்கலமும் தந்தவர் இவர். செப்டம்பர் நியூயார்க் தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் இவரைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த இவர் இப்போது பாகிஸ்தானில் மறைந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.

இப்போதும் ஆப்கனில் உள்ள நேட்டோ படைகள் மீதான தாக்குதல்களை நடத்துவது இவரது தலைமையிலான குழுதான் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இவரைப் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு காத்திருக்கிறது. மற்ற நாடுகளும் இதே போன்ற பரிசுகளை அறிவித்திருக்கின்றன.

ஒமர் குறித்து அமெரிக்க தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் அறிவித்துள்ள விவரம்

 அப்படி இருக்கையில், முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்ற கமல்ஹாசனின் தரப்பு கருத்துக்கு அவரிடம் உள்ள ஆதாரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வரவிருக்கிறது.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல