செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஷாஜஹானுக்கு (தாஜ்)மஹால் கட்ட உரிமையில்லை!

பொதுமக்கள் பணத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாயை எடுத்து தனது இனிய காதலிக்கு (தாஜ்)மஹால் கட்ட ஷாஜகானுக்கு உரிமை இல்லை.

பாபர் மசூதியை தாக்க சென்ற கும்பல் தாஜ்மஹாலை இடிக்க என்னை கூப்பிட்டிருந்தால் நான் தலைமை ஏற்று சென்று இருப்பேன் .

17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடக்கலை அதிசயமான தாஜ்மஹாலை பொது சொத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாயை எடுத்து தன் காதலிக்கு இத்தகைய மஹால் கட்ட அனுமதி இல்லை என்று கூறியிருப்பவர் உத்திரப்பிரதேச மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மொகம்மது ஆசம் கான் .இவர் மாநிலத்தின் செல்வாக்குமிக்க அமைச்சர் ஆவார்.முலாயம் சிங்கின் நெருங்கிய நண்பர்.

அவர் முசாபார் நகரில் மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பேசுகையில் 17 ஆம் நூற்றாண்டு கட்டடங்களை முன்னாள் முதல்வர் மாயாவதியால் கட்டப்பட்ட கட்டடங்களுடன் ஒப்பிட்டு பேசுகையில் இவ்வாறு ஷாஜஹானைப் பற்றியும் பாபர் மசூதி பற்றியும் தாஜ்மஹாலை இடிக்க தன்னை அழைத்திருந்தால் தான் அந்த குழுவிற்கு தலைமை ஏற்று நடத்தியிருப்பேன் என்றும் கூறினார்.

ஆசம் கான் இப்படி பேசும்போது அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆக்ராவில் வெளி நாட்டு பிரதிநிதிகளிடம் தாஜ்மஹால் பற்றி மிகவும் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தது குறிப்பிடத் தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல