திங்கள், 25 பிப்ரவரி, 2013

மிக்சர்

காரசாரமான, மொறு மொறுமொறுப்பான மிக்சர் செய்வதற்கான எளிய குறிப்பு.

தேவையான பொருட்கள்
◦கடலை மாவு – 4 கப்
◦மிளகாய்த்தூள் – 7 தேக்கரண்டி
◦பூண்டு நசுக்கியது – 5 – 7
◦இஞ்சி – ஒரு சிறிய துண்டு
◦கருவேப்பிலை – சிறிது
◦வேர்க்கடலை – 1 /2 கப்
◦அவல் – 1 /4 – 1 /2 கப்
◦உப்பு – தேவையான அளவு
◦எண்ணெய் – பொரிக்க

பூந்தி தயாரிக்கும் முறை
1. கடலை மாவு(2 கப்), மிளகாய்த்தூள்(2 தேக்கரண்டி), உப்பு, 1 – 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். மாவு பதம் சிறிது தண்ணியாக இருக்க வேண்டும். மிகவும் கெட்டியாக இருக்கக் கூடாது.
2.கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். எண்ணெய் சூடானதும் பூந்தி தேய்க்கும் கரண்டியில் மேலே ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி மற்றொரு கரண்டியால் அல்லது கையால் நன்கு தேய்த்து விடவும்.
3.மொறு மொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.

ஓமப்பொடி தயாரிக்கும் முறை
1.மீதி இருக்கும் கடலை மாவு, மிளகாய்த்தூள்(5 தேக்கரண்டி), உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்(முறுக்கு மாவைப் போல).
2.கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும் ஓமப்பொடி அச்சில் மாவைப் போட்டு பிழிந்து விடவும். பாத்திரம் முழுவதும் நிரப்பி விட வேண்டாம்.
3.எண்ணெயில் சிறு சிறு குமிழ்கள் வருவதைப் பார்க்கலாம். குமிழ்கள் வருவது நின்றவுடன் உடனடியாக ஓமப்பொடியை எடுத்து விடவும்.

அவல் பொரிக்கும் முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் அடுப்பை வைக்கவும். பொரிக்கும் கரண்டியின் மேலே அவலை வைத்து எண்ணெயில் பொரிக்கவும். அவல் கரண்டியின் மேலேயே இருக்க வேண்டும். கடாயின் உள்ளே போகக் கூடாது.


வறுக்க வேண்டியவை

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்து வேர்க்கடலை கறுப்பாகும் வறுத்து எடுத்து வைக்கவும்.

இறுதியாக பொரித்து வைத்துள்ள பூந்தி, ஓமப்பொடி, அவல் மற்றும் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை, சிறிது உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் மொறு மொறுப்பான , காரசாரமான மிக்சர் ரெடி.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல