திங்கள், 25 பிப்ரவரி, 2013

அனைத்துலகத்தின் டென்மார்க் பாடசாலைக்கூட்டத்தில் கைகலப்பு……

டென்மார்க்கின் தலைநகர் அமைந்துள்ள தீவில் அமைந்துள்ள ஒரு தமிழ் மொழி கற்ப்பிக்கும் பாடசாலைக்கான கூட்டத்தில் அனைத்துலகத்தினரை மக்கள் நையப்புடைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக எமக்கு மின்னஞ்சலில் தருவிக்கப்பட்ட தகவல்கள் எம்மால் விசாரனைக்குட்படுத்தப்பட்ட போது டென்மார்க்கில் தமிழ் மொழி கற்பிக்கும் பாடசாலைகளை மாலதி கலைக்கூடம் என்ற புனைப்பெயரில் அனைத்துலகத்தினர் நடாத்தி வருகின்றமையும் இந்த கல்விக்கூடங்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரிலேயே டென்மார்க்கில் பதியப்பட்டுள்ளாதாகவும் இந்த கல்விக்கழகம் ஊடாக அனைத்துலகத்தினர் 210.000 குறோணகளை வருடம் மக்களிடம் அறவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

எமக்கு மின்னஞ்சலில் கிடைக்கப்பட்ட தகவலின் படி கடந்த மாதம் கொல்பெக் என்ற நகரத்தில் உள்ள மாலதி கலைக்கூடத்தின் வருடாந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால் வழமைக்கு மாறாக கொல்பெக் மாலதி கலைக்கூடத்தின் நிர்வாகியின் சமூகம் அல்லாமலே கூட்டம் ஆரம்பமாகியது. கோல்பெக் மாலதி கலைக்கூடத்திற்கு புதிதாக ஒருவர் நிhவாகியாக நியமிக்கப்ட்டுள்ளதாகவும் அங்கே அறிவிக்கப்பட்டது.

நீண்ட காலம் இந்த கலைக்கூடத்திற்காக செயல்பட்ட பல தமிழ் பெற்றோர்கள் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டும் இருந்தனர். வருடாந்த கூட்டத்திற்கு முன்பாக யாரால் இந்த நிர்வாக மாற்றம் செய்யப்பட்டது என்ற கேள்விகள் கூட்டத்தில் பெற்றோரால் முன்வைக்கப்பட்டதும் அங்கே வந்திருந்த கேர்ணல் ஜெயா எனப்படும் அனைத்துலகத்தின் டென்மார்க் தலைநகர் அமைந்துள்ள தீவின் தளபதியும் அவரின் கையாட்களில் ஒருவரான லெப்டினன் குமார் எனப்படுபவரும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முற்பட்டுள்ளனர். கடந்த வருட நிர்வாகியே கூட்டத்தை நடாத்தவேண்டும் என பெற்றொர்கள் வற்புறுத்தியபொழுது பழைய நிர்வாகி சுகயீயனம் காரணமாக வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

அப்படியாயின் ஏன் இன்று கூட்டத்தை நடாத்துகின்றீர்கள் என மக்கள் வினாவியதோடு கேர்ணல் ஜெயாவையும் லெப்டினன் குமாரரையும் வாயைபொத்துப்படி மக்கள் அன்புடன் வேண்டிக்கொண்டனர். அதாவது பள்ளிக்கூட விடயத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் காசு சேர்க்கும் முகவர்களாக மட்டும் சம்பளத்திற்கு வேலை செய்த அனைத்துலகத்தினர் எனிமேல் தலையிடப்படாது என மக்கள் வேண்டியுள்ளனர்.


கூட்டத்தில் காட்டப்பட்ட கணக்கறிக்கையிலும் பிழைகள் இருந்ததாகவும் குறிப்பாக பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதற்காக அறவிடப்பட்ட பணத்தின் தொகையிலும் வேறுபாடு காணப்பட்டுள்ளது. அத்துடன் கணக்கறிக்கையில் 6000 குறோண்கள் ஒழுங்கான தகவல் இல்லாமல் செலவில் பதியப்பட்டிருந்தது. இந்த விடயத்திற்கு பதிலளித்த அனைத்துலகத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகி பாடசாலையில் கல்விகற்கும் ஒவ்வொரு பிள்ளைகளும் அனைத்துலகத்தின் கல்வி மந்திரி அருளானந்தராசாவிற்கு 100 குரோண்களை கொடுக்கவேண்டும் என தெரிவித்ததுடன் மேலதிக விடயங்களை பழைய நிர்வாகியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுமாறு கூறியதுடன் கூட்டத்தை கலைத்து மீண்டும் புதியதொரு கூட்டத்தை விரைவில் ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார்.

மின்னஞ்சலில் எமக்கு வந்த மேற்கூறிய விடையங்கள் தொடர்பாக நாம் டென்மர்க்கில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஜனநாயக அணியிடம் வினாவிய பொழுது.


டென்மாக்கில் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக மாலதி கலைக்கூடம் எனவும் டென்மார்க் அரசை ஏமாற்ற தமிழர் ஒருங்கிணைப்பு குழு எனவும் இந்த தமிழ் மொழி பாடசாலை தமிழீழ விடுதலைப்புலிகளின் காசு சேக்கும் முகவர்களால் நடாத்தப்பட்டுவருகின்றது. இந்த பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைத்துலகத்தால் நடாத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள வேண்டும் அல்லது தண்டனைப்பணம் கட்டவேண்டும். டென்மார்க்கில் பல பகுதிகளிலும் இந்த பாடசாலை நடாத்தப்படுகின்றது 2000 திற்கு மேற்பட்ட பிள்ளைகள் இந்த பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள். பாடசாலைகளில் கல்வி கற்கும் ஒவ்வொரு பிள்ளைகளும் பாடசாலைக்கு ஒருதொகை அங்கத்துவ பணமும் அனைத்துலகத்தினருக்கு 100 குறோண்களும் செலுத்த வேண்டும். ஓவ்வொரு பாடசாலையும் டென்மார்க் அரசிடம் இருந்தும் ஒரு தொகைப் பணத்தை உதவியாக பெற்றுக்கொள்கின்றனர்.




பாடசாலைக்கான நிர்வாகத்தை எந்த வித படிப்பறிவும் இல்லாத அனைத்துலகத்தின் டென்மார்க் பொறுப்பாளர் பிரியனே நியமிப்பார். வருடா வருடம் இந்த நியமிக்கப்பட்ட நிர்வாகம் ஒரு கணக்கறிக்கையை எவருக்கும் தெரியாதல் டென்மார்க் அரசிற்கு அனுப்புவார்கள்.

டென்மர்க்கில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பொறுப்பாக பினாமியாக செயல்படுபவர் அருளானந்தராசா எனப்படுபவர். பாடசாலைகளில் நடாத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் இவரே சிறப்பு அதீதியாக அழைக்கப்படவேண்டும் என்ற விதியும் இருக்கின்றது (யாழ்ப்பாண சிறிலங்கா படைத்தளபதி போல்) அருளானந்தராசா பாடசாலை கூட்டங்களில் கலந்து கொள்ளும் நேரங்களுக்கான சம்பளமும் (டென்மார்க் அரசிற்கு தெரியாமல் அதாவது கறுப்பு பணம்) போக்குவரத்து செலவும் பாடசாலை நிர்வாகத்தால் வழங்கப்படவேண்டும்.


கோல்பெக் நகரத்தில் உள்ள மாலதிகலைக்கூடத்திற்கு ஒரு நிர்வாகி பினாமியாக உள்ள போதும் அனைத்து முடிவுகளும் கேர்ணல் ஜெயாவால் தான் முடிவெடுக்கப்படுகின்றது. கேர்ணல் ஜெயாவின் மனைவியின் பெயரில் விடுதலைப்புலிகளுக்கு என சேர்க்கப்பட்ட பணத்தில் ஒரு கடையை அனைத்துலகத்தினர் நடாத்தி வந்திருந்தனர். ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்துடன் கடை கேர்ணலின் குடும்ப சொத்தாக மாறியுள்ளது. இந்த கடைக்கான விளம்பரம் டென்மார்க் விடுதலைப்புலிகளின் முகவர்களால் நடாத்தப்படும் இணையத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. மாலதி கலைக்கூடத்தில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் இந்த கடையில் கட்டாயம் கொள்வனவு செய்யவேண்டும் என்ற கட்டாயமும் கேர்ணலால் விதிக்கப்பட்டுள்ளது.

மாலதி கலைக்கூடம் என்ற பெயரில் ஜரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் டென்மார்க்கில் நடாத்தப்படும் இந்த பாடசாலைகளில் பல பாலியல் பிரச்சனைகளும் நடைபெற்றதாகவும் இந்த பாடசாலைகளில் டென்மார்க் அரசிற்கு வரி செலுத்தாமல் பலர் கறுப்பு பணத்திற்கு வேலை செய்வதாகவும் எமக்கு வந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவைபற்றிய முழுமையான செய்தி விரைவில் பதிவில் பதிவேற்றப்படும்.

பதிவு இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல