திங்கள், 25 பிப்ரவரி, 2013

குரோமா கீ என்பது எந்த கீயைக் குறிக்கிறது?

இது கம்ப்யூட்டர் கீ போர்டுடன் சம்பந்தப் பட்டதல்ல. இரண்டு இமேஜ்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் தொழில் நுட்பம். இதன் முழுப்பெயர் Chroma key compositing அல்லது chroma keying.

இது வீடியோ தயாரிப்பு அல்லது வீடியோ தயாரித்த பின்னர் எடிட்டிங்கில் பயன்படுகிறது. இதனை கிரீன் ஸ்கிரீன் அல்லது புளு ஸ்கிரீன் எனவும் சொல்கின்றனர். எளிமையாக ஓர் எடுத்துக்காட்டு !

நம் கதாநாயகனும் கதாநாயகியும் நயாகரா நீர்வீழ்ச்சியின் முன் ஆடிப் பாடுவதாக ஒரு காட்சியை நீங்கள் சில நொடிகள் பார்க்கலாம். இதற்காக மெனக்கெட்டு திரைப்பட யூனிட்டாகப் பலரை அழைத்துக் கொண்டு, நயாகரா நீர்வீழ்ச்சி செல்ல முடியுமா என்ன? ஒரு பச்சை அல்லது நீல நிறத்தில் பெரிய துணி ஒன்றைப் பின்னணியில் கட்டி, கதாநாய கனையும் கதா நாயகியையும் ஆட விட்டு முதலில் படம் எடுப்பார்கள். பின்னர் நயாகரா நீர்வீழ்ச்சியின் வீடியோ காட்சியினை, ஏற்கனவே எடுத்த ஆடல் பாடல் காட்சியுடன் இணைப்பார்கள். நமக்கு நீர்வீழ்ச்சி முன் எடுத்தது போலவே தெரியும். இதுதான் குரோமா கீ தொழில் நுட்பம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல