வெள்ளி, 29 மார்ச், 2013

பத்திரிகையாளர்களை நக்கலடிக்கும் படமா ‘சேட்டை’..?

யுடிவி தயாரித்திருக்கும் சேட்டை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் வெளியாகிறது. இந்தி டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்கான சேட்டையில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா மோத்வானி, நாசர், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். கண்ணன் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி ஆகியோர் ஒரு நாளிதழில் பணிபுரிவதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பத்திரிகையாளர்களை நக்கலடிக்கும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கண்ணன் கூறியிருக்கிறார். அவர்களின் (பத்திரிகையாளர்களின்) மன உணர்வுகளை அப்படியே பிரதிபலித்திருக்கிறோம் என்கிறார் கண்ணன்.

இந்தியில் வெளியான டெல்லிபெல்லியில் பாடல்களே இல்லை. தமிழுக்காக பாடல்கள் திணிக்கப்பட்டுள்ளன. காமெடி என்ற பெயரில் இவர்கள் வெளியிட்ட டிரைலரிலேயே முகம் சுளிக்கும் விஷயங்கள்தான் இடம் பெற்றிருக்கின்றன.

இந்தி பதிப்பில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படம் தமிழில் ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது. எப்படி சென்சார் ‘யு’ கொடுத்தார்கள் என்ற ஆராய்ச்சிக்கு போக வேண்டாம் என்கிறார் இயக்குனர் கணணன்.

சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி, பிரேம்ஜி என எல்லாரும் ஆஜராகியிருந்தாலும் சந்தானம் மட்டும் வரவில்லை. படப்பிடிப்பு காரணமா அல்லது பத்திரிகையாளர்களை சந்திக்க தயங்கி புறக்கணித்தாரா என்பது தெரியவில்லை. படத்தில் பல இடங்களில் பத்திரிகையாளர்களை நக்கலடித்திருக்கிற விஷயங்களை கேட்டால் பதில் சொல்வதில் சங்கடம் ஏற்படும் என்பதால் வராமல் நின்று விட்டாரா என்பதும் தெரியவில்லை. படம் ஏப்ரல் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தனுஷின் முதல் தயாரிப்பான எதிர்நீச்சல் படமும் ஏப்ரலில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவ கார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தனுஷ் சில பாடல்களை பாடியுள்ளார். கொல வெறி போலவே இந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய கவனிப்பை பெற்றதால் படத்தை வாங்க சன் பிக்சர்ஸ் உள்பட பல பெரிய நிறுவனங்கள் தயாராக உள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல