வெள்ளி, 29 மார்ச், 2013

புலிகளை உருவாக்கி தனி ஈழம் அமைப்போம்-மாணவர் போராட்டக் குழு!

தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப்புலிகள் இயக்கத்தை தொடங்கி தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பகவான்தாஸ்  தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்களின் மோட்டார் சைக்கிளில் பேரணியை தொடங்கிவைத்துப் பேசிய போதே மாணவர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் இதனை தெரிவித்தார்.
 
இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தொடங்கி தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்றார் அவர்.
 
இந்த மோட்டார் சைக்கிளில் பேரணி தெப்பக்குளத் தில்முடிபடையும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் காங்கிரஸ் அலுவலகம் இருப்பதால் மாணவர்கள் அங்குதாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெப்பக்குளம் பகுதியில் பொலிஸ் படை குவிக்கப்பட்டிருந்தது.
 
இதனிடையே மாணவர்கள் பேரணியாக வருவதைப் பார்த்து காங்கிரஸ் நிர்வாகிகள் வழியில் வைக்கப்பட்டிருந்த தங்களது கட்சிப் பதாகைகளை கழற்றி அலுவலகத்திற்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல