வெள்ளி, 29 மார்ச், 2013

இலங்கை விடயங்களில் அளவுக்கு மீறி தமிழக அரசு தலையிட முடியாது!

இலங்கை மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில்  தமிழக அரசு ஓரளவிற்கு மேல் தலையிட முடியாது என ‘த ஹிந்து’ பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ராம் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுக் கொள்கை என்பது அந்நாட்டு மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒரு விடயமாகும் என்று பி.பி.சி உலக சேவைக்கு வழங்கிய செவ்வியில் ராம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த விடயத்தில் மாநில அரசு தனது பங்களிப்பை வழங்க முடியும் எனினும் யதார்த்தத்திற்குப் புறம்பான கோரிக்கைகளை முன்வைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இலங்கை பிரச்சினையை வைத்து போட்டி அரசியலில் ஈடுபடுவதன் விளைவாகவே தமிழக சட்டப் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
 
சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளிலிருந்து இலங்கை வீரர்களை நீக்குவதற்கு எடுத்துள்ள தீர்மானம் சரியானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல