வெள்ளி, 29 மார்ச், 2013

உள்ளாடைகளில் புத்த பகவான்!

புத்த பகவானின் உருவம் பொறிக்கப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்த இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் மஹரகமவில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பொது பல சேனாவை சேர்ந்த பிக்கு ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு கைதுகள் இடம்பெற்று உள்ளன.

ஒருவர் மஹரகம கடிகார கோபுரத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட 07 உள்ளாடைகள் இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன.

இவருக்கு இவ்வாடைகளை விநியோகித்தவர் இவர் வழங்கிய தகவலின் பேரில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு உள்ளார். இவரிடம் இருந்து 21 உள்ளாடைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இவ்வுள்ளாடைகள் புத்த பகவானுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவனவாக உள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல