புதன், 5 ஜூன், 2013

ஆபீசில், போர் அடிக்கும் போது எப்படி டைம் பாஸ் பண்ணலாம்?? அருமையான டிப்ஸ்!!

1. ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.

2. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை (அல்லது ஃபிகர்களை) எண்ணிக் கொண்டிருக்கலாம்.

3. உங்கள் எதிரி யாரேனும் இருந்தால் அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.

4. நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல்,சினிமா கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.

5. கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி...
அது தான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது.

6.பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம்.

7.இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும் ஒரு பிகரை, பிக்கப் பண்ண டிரை
பண்ணலாம். அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால் கண்டிப்பாக சிரித்துப் பேசுவார்.

8. கார்ட்டூன் போட்டுப் பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல் பார்த்துக் கொள்வது அதி முக்கியம்.

9.கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம், ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல. கனவில் நமீதா, ரம்பா வகையறாக்களை வரவழைத்தல் நலம்.

10. கொட்டாவி, ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம்.

//நீங்கள் மாட்டிக் கொண்டால் கம்பேனி பொறுப்பேற்காது//

@ களவாணி பய
முகநூல்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல