புதன், 5 ஜூன், 2013

பச்சை குத்தினால் ஆல் பாஸ்வோர்ட் ஓகே!

நம் காலத்தில் நிறைய கஜினிகள் உலவுகிறார்கள்.ஆம்- நிறைய பேருக்கு இப்போதெல்லாம் பாஸ்வோர்ட் வைத்த உடனே ஸ்பீடாய் மறந்துவிடும். அல்லது ரொம்ப சிம்பிளான பாஸ்வோர்ட் யூஸ் பண்ணி ஹேக்கர்களுக்கு வேலையை ஈஸியாக்கி விடுவார்கள். இதனை முறியடிக்கும் வண்ணம் மோட்டோராலா ஒரு புது வகை சிலிக்கான் ஸ்டிக்கரை உருவாக்கி உள்ளது.

இதை உடம்பில் பச்சை போல் ஒட்டி கொள்ளலாம் அல்லது சிறு குளிகை போல் முழுங்கியும் கொள்ளலாம். இதனால் உங்கள் கணணி / பேங் லாக்கர் /வீடு / வாகனம் போன்ற அத்தனைக்கும் இதில் இருந்து ஆட்டோமெட்டிகாக பாஸ்வோர்டை எடுத்த்து கொள்ளும். அத்துடன் இது தண்ணி பட்டாக்கூட ஒண்ணும் ஆகாது.

இப்போதைக்கு இந்த பச்சை குத்தினது போல் உள்ள ஸ்டிக்கர் இரண்டு வாரத்திற்க்கும் – முழுங்கும் மேட்டர் ஒரு வாரத்திற்க்கும் தாங்குமாம். ஆனால் இன்னும் ஒரு வருடத்திற்க்குள் இது குழந்தை பிறந்த உடன் இதை உடம்பில் போட்டு விட்டால் வாழ் நாள் முழுவது இதை வைத்து அனைத்து பாஸ்வோர்ட்களை பதியும் போது இதில் அதுவே டிரான்ஸ்ஃபர் ஆகி அப்புறம் கவலையே இல்லை என்று உத்தரவாதம் தருகிறார்கள்..
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல