புதன், 5 ஜூன், 2013

’இதுவும்தாண்டா போலீஸ்!

காஷ்மீரில் சப் இன்ஸ்பெக்டர் சிவ கிருஷ்ண சர்மா கைது செய்யப்பட்டிருக்கிறார். சராசரி எஸ்.ஐ அல்ல. பல பதக்கங்கள், விருதுகள் பெற்றவர். மாநிலத்தின் மிக உயர்ந்த ஷேர்,இ,காஷ்மீர் விருதை இருமுறை வென்றவர். தீரச் செயலுக்கான ஜனாதிபதி விருதும் பெற்றவர்.

நூறு தீவிரவாதிகளுக்கு மேல் இவரது துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகியுள்ளனர். அதனால் கிடைத்த பட்டம் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவரை அவர்கள் விட்டுவைப்பார்களா? போட்டுத்தள்ள பலமுறை முயற்சி செய்தனர். சிறு காயங்களுடன் ஒவ்வொரு முறையும் உயிர் தப்பினார். 15 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் சேர்ந்த சர்மா குறுகிய காலத்தில் அர்ப்பணிப்பையும் வீரத்தையும் வெளிப்படுத்தி விருதுகளை குவித்ததால் அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்றார். அவரது பாதுகாப்புக்காக ஒரு தலைமைக்காவலர் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டார். பெயர் முகமது அயூப். அவரும் சர்மாவுடன் கைதாகியுள்ளார்.

காவல்துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரியை அவர்களே கைது செய்த காரணம் என்ன? தீவிரவாதிகளுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது என்கிறார்கள் அதிகாரிகள். உளவு பார்த்து தகவல் சேகரிப்பதற்காக தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது சகஜம்தானே என்று கேட்டால், கிடைக்கும் பதில் அதிர்ச்சியாக இருக்கிறது.

தீவிரவாதத்தை விட்டுவிடாதீர்கள் என்று கூறி, அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி வழி நடத்தியிருக்கிறார் சர்மா. அப்போதுதானே பதக்கங்கள் தொடரும். ஏப்ரல் 28ம் தேதி டோடா மாவட்டத்தில் உள்ள தாத்ரி காவல் நிலையம் மீது கையெறிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது இவர் சொல்லிதான் நடந்துள்ளது. தேவையான குண்டுகளையும் வயர்லெஸ் கருவிகளையும் தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்திருக்கிறார்.

தாக்குதல் நடத்தியவர்களை பிடித்து விசாரித்ததில் உண்மை வெளியே வந்திருக்கிறது. திருந்தி வாழ நினைத்தாலும் போலீஸ் அதிகாரிகள் விடுவதில்லை என்று பழைய கேடிகள் அளித்த வாக்குமூலங்களை படித்திருக்கிறோம். தங்கள் பிழைப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கீழே இறங்க துணியும் போலீஸ் அதிகாரிகள் இருக்கும் வரை குற்றங்கள் குறையப் போவதில்லை.

தினகரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல