செவ்வாய், 30 ஜூலை, 2013

சவூ­தியில் உயி­ரி­ழந்து 45 நாட்கள் ஆகியும் உடலை பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை

உற­வி­னர்கள் கவலை


சவூதி நாட்­டுக்கு தொழி­லுக்­காகச் சென்ற தொழி­லாளி ஒருவர் உயி­ரி­ழந்து கடந்த 45 நாட்­க­ளா­கியும் அவர்ருடை­ய உடலைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக அவ­ரது உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றார்கள்.

இது தொடர்­பாக உற­வி­னர்கள் தெரி­விக்­கையில்,

தல­வாக்­கலை, மிள­கு­சேனை தோட்­டத்தைச் சேர்ந்த 32 வய­து­டைய 3 பிள்­ளை­களின் தந்­தை­யான பொன்று­ரட்னம்- மகேந்­திரன் என்­பவர் கடந்த மே மாதம் இலங்­கையில் உள்ள வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு முக­வரின் ஊடாக சவூதி நாட்­டுக்கு தொழி­லுக்­காகச் சென்­றுள்ளார்.

இவர் கடந்த யூன் 19ஆம் திகதி உயிர் இழந்­த­தாக இறந்­த­வ­ருடன் இருந்த ஒருவர் தமக்கு தகவல் அனுப்­பி­ய­தா­கவும் அதனை நாம் உறு­திப்­ப­டுத்திக் கொண்­ட­தா­கவும் உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றார்கள்.

இறந்­த­வ­ரு­டைய உடலை இலங்­கைக்கு கொண்டு வரு­வது தொடர்­பாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு முகவர் மற்றும் சவூதி தூத­ரகம், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் என்­ப­வற்­றுடன் பல தடவை தொடர்­பு­கொண்டு கேட்ட போதும் அவர்கள் இது விட­யத்தில் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை என அவ­ரது உற­வி­னர்கள் மேலும் தெரி­விக்­கின்­றார்கள்.

உயி­ரி­ழந்து 45 நாட்­க­ளா­கியும் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு இலங்கை க்கு கொண்டு வரமுடியாத நிலை மை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றா ர்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல