செவ்வாய், 30 ஜூலை, 2013

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் பல நோய்களைக் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில், இதில் அதிக அளவு நொதிகள் இருப்பதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும். மேலும் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும்.

- கேரட்

இளமையில் வயோதிப தோற்றம் ஏற்படுவதை தடுக்க, சருமத்தின் வெளி படிவத்தை பராமரிக்க வேண்டும். அதற்கு கேரட்டிலுள்ள ரெடின் 'ஏ' உதவுகின்றது.

சீஸ்

முகம் பொழிவுடன் இருப்பதற்கு, உணவுடன் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சீஸை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் ஸ்விஸ், செட்டர் அல்லது கௌடா போன்ற சீஸ் வகைகளை விரும்பி சாப்பிட்டால், அவை வாயில் பாக்டீரியாவை அழித்து, பல் சொத்தையாவதை தடுக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

சருமத்தில் கொலாஜன் இருந்தால், சருமம் இளமையுடன் காணப்படும். ஆனால் கொலாஜனை நேரடியாக சருமத்தில் சேர்க்க முடியாத காரணத்தால், கொலாஜன் அடங்கிய பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குருதிநெல்லி (Cranberry)

குருதிநெல்லியை அதிகம் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பூண்டு

பூண்டு சரும சுருக்கத்தை நீக்கி, திசுக்களை புதுப்பிக்க உதவும். ஆகவே முடிந்த வரையில் இதனை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

தயிர்

தயிரில் கல்சியம் அதிகமாக இருப்பதால், பற்களை வெள்ளையாக வைத்திருக்கும். மேலும் பற்கள் சொத்தையாகாமல் பாதுகாப்பாகவும் இருக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

விட்டமின் ஏ என்னும் சத்து சரும சுருக்கத்தை தடுக்க உதவுகிறது. இத்தகைய சத்து சர்க்கரைவள்ளிக்கிழங்கில் அதிகம் இருப்பதால், அதை உண்டால் சருமம் சுத்தமாகவும் மென்மையாகவும் இருக்கும்.

தக்காளி

தக்காளியில் அதிக அளவு விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. அதனால் அதனை உணவில் சேர்த்துக்கொண்டால், சருமம் மென்மையாக இருக்கும்.

காய்கறிகள்

தினமும் காய்கறிகளை 3- அல்லது 5 முறை சாப்பிட வேண்டும். இதில் ஒருவேளை பச்சை காய்கறி மற்றும் கீரை வகைகளை சாப்பிட வேண்டும்.

இறைச்சி

இறைச்சியை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் கொழுப்பை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். வான் கோழி மற்றும் கோழிக்கறியை இரண்டு முறை சாப்பிடலாம். தினமும் மீன் சாப்பிட வேண்டும்

பழங்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பழங்களை சாப்பிடவும். மேலும் ஒவ்வொரு முறையும் 1/2 கப் நறுக்கிய பழங்களை சாப்பிடவும்.

கொழுப்பு

சாலட் ட்ரெஸ்ஸிங், சமைக்கும் எண்ணெய், வெண்ணெய் மற்றும் மயோனைஸ் போன்றவற்றை தினமும் இரண்டு முறை சாப்பிடலாம்.

virakesari
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல