மன அழுத்தம்
ஈஸ்ட்ரோஜன் பெண்களின் மன அழுத்தத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு உதவுகிறது. பஃபலோ பல்கலைக்கழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, பெண்கள் மன அழுத்தத்தின் போது மிகத்திறமையாகச் செயல்படுகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அவர்களிடம் உள்ள ஈஸ்ட்ரோஜன் தான். மேலும் அந்த ஆய்வு ஆண்களிடம் உள்ள ஹோர்மோன் அளவுடன் ஒப்பிடும் போது, பெண்களிடம் உள்ள ஹோர்மோன்களின் அளவு அதிகம் அதன் காரணமாகவே மிகவும் இக்கட்டான நேரங்களில் கூட பெண்களால் மிகத்திறமையாக சமாளித்து செயல்பட முடிகிறது என தெரிவிக்கப்படுகிறது.
ஆரோக்கியமான இதயம்
பெண்களின் இதயத்தை ஈஸ்ட்ரோஜன் பாதுகாக்கிறது. பொதுவாக ஈஸ்ட்ரோஜனானது இதய தமனி மற்றும் சிரைகளைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது. எனவே இரத்த நாளங்களில் கொழுப்புப் படிவுகள் படியாமல் பார்த்துக் கொண்டு, அவற்றைப் பாதுகாக்கிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ட்ரைகிளிசரைட் அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, பெண்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும் வாய்ப்பும் குறைகிறது.
நோய்த்தொற்றுகள்
பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹோர்மோன் தொற்றுக்களையும், வீக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஈஸ்ட்ரோஜனுக்கும், பெண்களுக்கு ஏற்படும் தொற்றுக்களிலிருந்தும், வீக்கங்களிலிருந்தும் அளிக்கும் பாதுகாப்புக்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் பெண்களுக்கு காயங்கள் ஏற்படும் போது இரத்தக் குழாய்களிலிருந்து வெள்ளை இரத்த அணுக்கள் வெளியேறும் வீதத்தை ஈஸ்ட்ரோஜன் குறைக்கிறது என்றும், இதன் மூலம் வீக்கம் ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டு, உடலானது தொற்றுக் கிருமிகளை எதிர்த்து வலிமையுடன் போராட முடிகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலியல் உணர்ச்சி
பெண்களின் பாலியல் உணர்வை ஈஸ்ட்ரோஜன் தூண்டுகிறது. பெண்களின் பெண்மைக்குக் காரணமே ஈஸ்ட்ரோஜன் தான். மார்பகங்கள், இடுப்பில் ஏற்படும் அழகிய வளைவுகள், சருமங்களற்ற வழவழப்பான முகம் ஆகியவற்றிற்குக் காரணம் ஈஸ்ட்ரோஜன் தான். ஈஸ்ட்ரோஜன் தான் பாலூட்டிகளின் பெண்ணினத்தில் காணப்படும் லார்டோஸிஸ் என்னும் குணத்திற்குக் காரணம் ஆகும். இதன் காரணமாக கருவுறுதல் பெண்களுக்கு எளிதாக நிகழ்கிறது.
வலிமையான எலும்புகள்
எலும்புகளைப் பலப்படுத்தி ஆஸ்டியோ பொரோஸிஸ் வராமல் தடுக்கிறது. பெண்களது எலும்புகளின் அடர்த்திக்குக் காரணம் ஈஸ்ட்ரோஜன் தான். ஏனெனில் அந்த ஹோர்மோன், பெண்களது உடலுக்குள் கால்சியம் கரைந்து செல்லாமல் தடுத்து, எலும்புகளின் உடையும் தன்மையைக் குறைக்கிறது. இதன் காரணமாக பெண்களது எலும்புகள் பாதுகாக்கப்பட்டு, ஒஸ்டியோபொரோஸிஸ் எனப்படும் எலும்பு மென்மையாதல் நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
ஆரோக்கியமான நரம்பு செயல்பாடுகள்
ஈஸ்ட்ரோஜன் நரம்புகள் பாதிப்படையாமல் தடுத்து, நரம்புகளின் கடத்தும் திறனை மேம்படுத்துகிறது. பெண்களது உடலில் செரொடோனின் என்னும் திரவத்தின் அளவைப் பெருக்க ஈஸ்ட்ரோஜன் உதவுகிறது. செரொடோனின் என்பது நரம்புகளில் காணப்படும் கடத்தியாகும். இது மூளையிலிருந்து உடலின் பிற பகுதிகளுக்குக் கட்டளைகளையும், உடலின் பிற பகுதிகளிலிருந்து உணர்வுகளை மூளைக்கும், கடத்த உதவுகிறது. இதன் மூலம் நரம்புகளின் செயல்பாடுகள் இயல்பாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
இளமையான தோற்றம்
பெண்களின் இளமையான தோற்றத்தை தக்கவைக்க ஈஸ்ட்ரோஜன் உதவுகிறது. ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருந்தால், மிகவும் இளமையாகக் காட்சியளிப்பார்கள் என்று சொல்கிறது. ஏனென்றால், ஈஸ்ட்ரோஜனானது, சருமத்தை தடிப்பாக்கி, கொலாஜன் அளவையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் சருமத்தில் சுருக்கங்கள் குறைகின்றன. மேலும் சருமத்திற்குள் நிலவும் ஈரத்தன்மையையும் சரியான அளவில் பேணி, பெண்கள் ஒருவிதமான பளபளப்பு மற்றும் பிரகாசமாகத் தோற்றமளிக்கவும் உதவுகிறது.
சந்தோஷம்
பெண்களை ஈஸ்ட்ரோஜன் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. மக்களின் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹோர்மோனான 'எண்டோர்பின்' அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதற்குக் காரணம், இந்த பெண்மை ஈஸ்ட்ரோஜன் தான். பெண்களின் மனதில் சந்தோஷத்தையும் தோற்றுவிப்பது 'எண்டோர்பின்' என்னும் வேதிப்பொருள் தான் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
virakesari

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக