செவ்வாய், 30 ஜூலை, 2013

மொகலாய் மட்டன் புலாவ்

இந்த மட்டன் புலாவ் மிகவும் சுவையானது மற்றும் எளிமையானதும் ஆகும்.

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ (சிறிதாக வெட்டியது)

பாசுமதி அரிசி - 2 கப்

தயிர் - 1 கப்

வெங்காயம் - 2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

சீரகப் பொடி - 1 மேசைக்கரண்டி

மல்லி தூள் - 1 மேசைக்கரண்டி

கரம் மசாலா - 1/2 மேசைக்கரண்டி

பட்டை - 1, மிளகு - 6,கிராம்பு- 4,ஏலக்காய் - 4,

பிரியாணி இலை - 1, குங்குமப்பூ - 1 சிட்டிகை (பாலில் ஊறவைத்தது), முந்திரி - 10, உலர் திராட்சை - 10, நெய் - 1 டேபிள் மேசைக்கரண்டி, எண்ணெய் - 2மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை:

மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் இட்டுக்கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 45 நிமிடம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்கவேண்டும். பின்னர் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் போட்டு வதக்கிவிட வேண்டும். பிறகு ஊறவைத்துள்ள மட்டனை போட்டு 2 நிமிடம், வதக்க வேண்டும்.

அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 7-8 நிமிடம் தீயை குறைவில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும். பின்னர் முந்திரி பருப்பு மற்றும் உலர்திராட்சையை போட்டு தீயை குறைவில் வைத்து வதக்கிவிட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 2-3 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

இந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் உள்ள மட்டனானது பாதி அளவு வெந்திருக்கும். மேலும் அதைப் பார்த்தால், கிரேவி போன்று காணப்படும். இவ்வாறு கிரேவி போன்று இருப்பதை எடுத்து, குக்கரில் அரிசியுடன் சேர்த்து பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும். மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் குங்குமப்பூ பாலை மேலே ஊற்றி கிளறி, இறக்கிவிட வேண்டும். இப்போது சூப்பரான மொகலாய் மட்டன் புலாவ் தயார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல