திங்கள், 29 ஜூலை, 2013

ஆண் மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைபாட்டுக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்

திருமணம் முடிந்த தம்பதியினருக்கு குழந்தையின்மை என்பது நோய் அல்ல, ஒருவகை பாதிப்புதான் என்றாலும், கணவன், மனைவி இருபாலாரிடத்தும் இப் பிரச்சினை பெரும் கவலைக்குரிய விடயமாக மாறிவிடுகிறது. மனிதர்களின் ஒவ்வொரு சிக்கல்களுக்கும் இறைவன் மாற்று வழிமுறைகளை நிறையக் கொடுத்திருக்கிறான். அந்த வகையில் குழந்தைப்பேற்றை அடைய முடியாத தம்பதியினருக்கு மாற்று வழியாக இறைவன் மருத்துவத்துறையினர் மூலம் அளித்திருக்கும் மாபெரும் கொடை ஐ.வி.எஃப் எனப்படும் செயன்முறைக் கருவேற்றம். ஆனாலும்கூட, இந்த செயன்முறைக் கருவேற்றம் என்பது வசதி உடையவர்களால் மட்டுமே செய்துகொள்ள முடியும் என்கிற நிலைதான் இன்றுவரை தொடர்கிறது. இதைக் கவனத்தில் கொண்டு ஏழைத் தம்பதியினரும் பயன்பெறும் வகையில் மிகக் குறைந்த செலவில், செயன்முறைக் கருவேற்றத்தை செய்து வருகிறார் டொக்டர் சாமுண்டி சங்கரி.

குழந்தையின்மை பாதிப்பு சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களில் முதன்மையானவராகத் திகழும் டாக்டர் சாமுண்டி சங்கரியை நேரில் சந்தித்து, குழந்தையின்மை பாதிப்பு பற்றியும், சிகிச்சை முறை பற்றியும் உரையாடினோம்.

குழந்தையின்மைக்கு காரணமான ஆண், பெண் இருபாலாரில் யாருடைய குறைகளை எளிதில் போக்க முடியும்?

குழந்தை இல்லை என்றாலே, அதற்கு செயன்முறை கருவேற்றம்தான் தீர்வு என் கிற கருத்து தவறானது. ஆண், பெண் இருபாலாரிலும், அவரவர் உடலிலுள்ள குறை பாடுகள் எந்தமாதிரியானவை என்பதை வைத்தே இது தீர்மானிக்கப்படுகிறது. பெரும் பான்மையான குறைபாடுகள் மருந்துகள் மூலமாகவே குணமாக்கப்பட்டுவிடும். மிக அத்தியாவசியம், மாற்றுவழி இல்லை என்கிற நிலையில்தான் செயற்கை முறை கருவூட்டல் தேவைப்படுகிறது. மற்றபடி ஆண், பெண் இருவரில் யாரிடம் குறைகள் இருந்தாலும் அவற்றை மருந்துகள் மூலமாக சரிசெய்ய முடியும் என்பதுதான் கருவாக்கல் மையங்களின் முதல் கடமையாக இருக்கிறது. எனவே, குழந்தையில்லாத தம்பதியினர் இந்த விடயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. மருந்துகளின் மூலமாக தீர்வு காணப் பட வழி இருக்கும்போது, செயன்முறை கரு வேற்றலுக்கு முயற்சிக்க வேண்டாம்.

ஆண்களிடத்தில் இருக்கும் குறை பாடுகளுக்கு எம்மாதிரியான சிகிச்சை முறை தேவைப்படுகிறது?

ஆண்களில் இரு வகையான குறைபாடுகள் இருக்கின்றன. ஒன்று ஆண் மலட்டுத் தன்மை, இன்னொன்று ஆண்மைக் குறைவு. ஆண் மலட்டுத்தன்மைக்கு உலகம் முழுவதும் 30 வீதம்பேர் ஆளாகியிருக்கிறார்கள். மலட்டுத் தன்மையுள்ள ஒரு ஆணால் தன் மனைவியை இல்லற சுகத்தில் முழுமையாக நிறைவு கொள்ளச் செய்ய முடியும். ஆனால், இவரால் குழந்தைப் பேற்றை உருவாக்க முடியாது. ஆண்மைக் குறைவு என்பது, ஆணின் பிறப்புறுப்பு பல்வேறு காரணங்களால் எழுச்சியடையாமல் போவது. அதன் காரணமாக இவரால் இல்லற சுகத்தில் ஈடுபட முடியாது. உதாரணமாக மனைவியை நெருங்கும் முன்பே விந்து வெளியாதல், உறுப்பு துவண்டு, சிறுத் துப் போதல் போன்ற சில காரணங்களைச் சொல்ல முடியும்.

இங்கே ஒரு விடயத்தை உற்று கவனிக்க வேண்டும். அதாவது, ஆண்மைக் குறைவு உள்ள நபருக்கு வெளிப்படும் விந்தில் உயிரணுக்கள் இருக்கும். ஆனால், தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. ஆண் மலட்டுத் தன்மையுள்ள நபருக்கு வெளிப்படும் விந்தில் உயிரணுக்கள் இருக்காது. ஆனால், தாம்பத்திய உறவில் முழுமையாக ஈடுபடலாம். ஆண்மைக் குறை பாடு உள்ளவர்களுக்கு எளிதாக குழந்தைப் பாக்கியம் கிடைத்துவிடும். ஆண் மலட்டுத் தன்மை உள்ளவர்களுக்குத்தான் நவீன சிகிச்சை முறைகள் தேவைப்படுகின்றன.

ஆண் மலட்டுத் தன்மை என்றால் என்ன? அது எவ்விதக் காரணங்களால் ஏற்படுகிறது?

தாம்பத்திய உறவின்போது உயிரணுக்கள் விந்தில் வெளிப்படாமல் இருந்தால் அல் லது உயிரணுக்களே உற்பத்தியாகாமல் இருந் தால் அதுதான் ஆண் மலட்டுத்தன்மை எனப்படுகிறது. பொதுவாக, ஆணின் விரை தான் உயிரணுக்களை உற்பத்தி செய்யும் உற்பத்திக்கூடமாக விளங்குகிறது. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மட்டுமே இவ்வாறான உயிரணு உற்பத்தி செய்ய முடி யாத சூழல் நிகழ்கிறது.

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, அவளின் கருப்பையில் இருக்கும் ஆண் குழந்தையின் வயிற்றுப் பகுதிக்குள் இருக்கும் விரைகள், அந்தக் குழந்தை பிறக்கும்போது தானாகவே கீழிறங்கி விரைப் பைக்குள் வரவேண்டும். அவ்வாறு வராமலும், முழு வளர்ச்சி அடையாமலும் இருந்தால், அந்த விரைகளால் உயிரணுக்களை உற்பத்தி செய்ய இயலாது. மேலும், ஆண்களுக்கு சிறுவயதில் ஏற்பட்ட அம்மை நோய், விரைக் குள் செல்லும் இரத்தக் குழாய்களில் சிதைவு, விரைகள் ஒன்றோடு ஒன்று முறுக்கிக் கொள்ளுதல் போன்றவற்றாலும் உயிரணுக்கள் உற்பத்தி பாதிக்கப்படும். விரைகள் முறுக்கிக் கொண்டிருந்தால் அதைக் கண்டறிந்து எளிதாக நீக்கிவிடலாம்.

விரையிலிருந்து புறப்பட்டு விந்து நாளங் கள் வழியாக உயிரணுக்கள் வெளியே வரும். இந்த நாளங்களில் அடைப்பு இருந்தால் அவற்றால் வெளியேற முடியாது. மேலும், சிறுநீர்த் தாரை வழியாக விந்தை வெளியேற்றும் தசை கள் சரியாகச் செயற்படாமல் போனாலும் உயிரணுக்களை வெளியேற்ற முடியாது. மேலும், மூளையிலுள்ள பிட்யூட்டரி ஹார்மோன் சரியாக சுரக்காமல் போகும் பட்சத்தில் ஹார்மோன்கள் சரியாகத் தூண்டப்படுவதில்லை. மேலும், புரிந்துகொள்ள முடியாத காரணங்கள் பலவற்றால் ஹார்மோனின் கட்டளைக்கு விரைகள் கீழ்ப்படியாமல் போகும்போது உயிரணுக்கள் உற்பத்தி நடைபெறாமல் மலட்டுத் தன்மை உண்டாகும்.

ஆண் ஹார்மோன் போதுமான அள வில் இருந்தாலும் விரைச் செல்களால் உயிரணுக்களை உற்பத்தி செய்ய இயலாமல் போகும். இம்மாதிரியான சூழலிலும், பிறவியிலேயே குரோமோசோம்களில் குறைபாடுகள் இருந்தாலும் மலட்டுத் தன்மை வருகிறது. மேலும், பால்வினை நோய்கள், கோனேரியா, டி.பி நோய் மற்றும் நோய்த் தொற்றுகள் அல்லது காயம் போன்றவற்றாலும், விரையை விந்து நாளத்துடன் இணைக்கும்மிகச்சிறு குழாய்களில் அடைப்பு ஏற்பட் டாலும் விந்தணுவானது திரவத்தோடு கலக்க முடி யாமல் போகும். இந்த நிலையிலும் மலட்டுத் தன்மை ஏற்படும். விந்து பின்புறமாகச் சென்று சிறுநீர்ப் பையோடு கலந்துவிடுவது இதற்குக் காரணம் ப்ராஸ்டேட் தசையிலுள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டிருப்பது. மேலும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள். இப்படிப்பட்ட பிரச்சினைகள் கண்டறியப்பட்டால் ப்ராஸ்டேட் பகுதியில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து சீர்படுத்திவிட முடியும்.

சரி, உயிரணுக்களில் குறைபாடு என்கிறார்களே அது எதனால் ஏற்படுகிறது?

பல ஆண்களிடம் இந்தப் பிரச்சினை பாரம்பரியமாகவோ, அல்லது அறியப்படாத காரணங்களாலோ தோன்றுகிறது. இதற்கான தெளிவான காரணங்கள் இன்னமும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும், கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முடிவுகளின்படி உயிரணுக்களின் தலை பெரிதாக இருத்தல், வால் இல்லாமல் இருத்தல் போன்ற இயல்புக்கு மாறான குறைபாடுகள் ஏற்படுகின்றன.

மலட்டுத் தன்மை, ஆண்மைக் குறைவு தவிர ஆண்களிடம் வேறு என்ன காரணங்கள் இருக்கின்றன?

ஆண்களுக்கு ஹார்மோன் பிரச்சினையின் தீவிரத்தை வைத்தே விந்தணுவின் ஊர்ந்து செல்லும் திறன், அவற்றின் தன்மை ஆகியவை அமைகின்றன. ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் உயிரணுவால் ஊர்ந்து செல்ல இயலாது. மேலும், உயிரணுக்களின் இயல்பும் மாற்றமடைந்து குறைபாடுள்ள அணுவாக அமைகிறது. இவை தவிர, விரையைச் சுற்றியுள்ள நரம்புகள் அளவு க்கு அதிகமாகத் தடித்துவிடுவது. அல்லது வெரிகோஸ் வெயின் எனப்படும் இரத்த நாளச் சிதைவுகள், இரத்த நாள முறுக்கம் ஆகியவை உயிரணுக்களின் உற்பத்தியைப் பாதித்துவிடுகின்றன. இயல்புக்கு மாறாக தடித்த இரத்த நாளங்கள் இருக்கும்போது அவை விரையின் வெப்ப நிலையை அதிகரித்துவிடுவதால், உயிரணுக்கள் உற்பத்தியாகாது. இவ்வாறே, இரத்த நாளச் சிதைவின்போது விரைகள் அதிகமாக வெப்பமடைகின்றன. இதனால் உடலுறுவுச் செயற்பாடுகள் எதுவும் பாதிக்கப்படுவதில்லை. மேலும், விரையில் அடிபடுதல் போன்றவை ஏற்பட்டாலொழிய வலியும் தெரிவதில்லை. ஆனால், இம்மாதிரியான ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி தடைபட்டிருக்கும்.

இவை தவிர, புராஸ்டேட் சுரப்பிகளில் நோய்த் தொற்று ஏற்பட்டால் அது விந்தணுவின் ஊர்ந்து செல்லும் திறனைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. மைக்கோபிளாஸ்மா எனப்படும் நுண்ணுயிரி புராஸ்டேட் சுரப்பியிலிருந்து இத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது. தவிர, சில சமயங்களில் மைக்ராஸ் கோப்பில் பார்த்தால் இயல்பாகத் தெரிகின்ற விந்தணுக்கள் ரசாயன மாற்றமடைந்திருக்கும். இதனால் அணுக்கள் ஊர்ந்து செல்வதில் பாதிப்புகள் ஏற்படும். அந்நியப் பொருட்களான வைரஸ், பாக்டீரியாக்கள் போன்றவை நுழையாத வகையில் பாதுகாப்பதற்காக நமது உடலில் நோய் எதிர்ப்பு ஊக்கி அணுக்கள் உள்ளன. இவற்றை ஆண்டி பயாடிக்குகள் என்பார்கள். இவை சில இரசாயன மாற்றத்தினால் விந்தணுக்களை அந்நியப் பொருட்களாக நினைத்து அழித்துக் கொன்று விடுகின்றன. இதனால் 5 வீதம் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை உண்டாகிறது.

இவை தவிர, தாம்பத்தியக் குறை பாடுகளும் ஆண்களிடம் சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற­ன.

மேலதிக தொடர்புக்கு:

டொக்டர் சாமுண்டி சங்கரி M.D.,D.G.O.,

மின்னஞ்சல்: sfrc@srushtihospital.com

அலைபேசி: 0091-9840 669 669
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல