புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றதாகவும் தகவல்
பிரபல நடிகை கனகா, நோய் வாய்ப்பட்டு கவனிக்க ஆளில்லாமல் ஆலப்புழாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 1989 இல் ராமராஜனுடன் ‘கரகாட்டக்காரன்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, கார்த்திக், பிரபு உள்ளிட்ட தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ‘குஸ்ருதி’ என்ற மலையாள திரைப்படத்தைத் தொடர்ந்து வாய்ப்பின்றி இருந்த இவர், எங்கிருக்கிறார் என்பது தெரியாமலே இருந்தது.
இந்நிலையில், அவர் தற்போது ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ஆலப்புழா மருத்துவமனைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கவனிக்க ஆளில்லாதவர்களுக்கான மருத்துவ மையத்திலும் கனகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக