சிறுநீரக செயலிழப்பானது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதலாவது லேசான சிறுநீரக செயலிழப்பு அதாவது 30 விழுக்காடு செயலிழந்துபோவது. இரண்டாவதாக நடுத்தர செயலிழப்பு. அதாவது 30 விழுக்காடு முதல் 60 விழுக்காடு வரை. மூன்றாவதாக அதிக சிறுநீரக செயலிழப்பு. 60 விழுக்காட்டிற்கு மேல் செயலிழந்து போவது.
நமது உடலிலுள்ள ரத்தத்தில் கிரியாட்டின் அளவு 1.2 மில்லி கிராமுக்கு மேல் 2 மில்லி கிராமுக்கு கீழே இருந்தால் அது லேசான சிறுநீரக செயலிழப்பு. அதற்கு மேல் 6 மில்லி கிராம் வரை இருந்தால் அது நடுத்தர, அதிக செயலிழப்பாக மாறுகிறது. சிறுநீரில் புரதச் சத்து ஒழுங்கு, உயர் ரத்த அழுத்தம், கை, கால் வீக்கம், சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சிறுநீரகம் சரியாகச் செயற்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். சரியாக செயற்படாத சிறுநீரகங்கள்தான் நாளடைவில் சிறுநீரக செயலிழப்பாக மாறுகின்றன.
சிறுநீரக செயலிழப்பு பல்வேறு காரணங்களால் வருகிறது. அதாவது சிறுநீர் மண்டலத்தில் தமனி-கிட்னி, கிட்னி-யுரேட்டர், யுரேட்டர்-பிளாடர், பிளாடர்-யுரித்ரா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இணைப்பு குழாயின் கழுத்துப் பகுதியிலோ அல்லது உள்ளுறுப்புகளிலோ கட்டி அல்லது வீக்கம் வந்தால் சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். அதே மாதிரி சிறுநீரகத் துக்கு மேலிருக்கும் அட்ரினல் சுரப்பி, சிறுநீர்ப்பைக்கு அருகிலிருக்கும் புராஸ்டேட் சுரப்பி ஆகிய இரண்டில் வீக்கம் தென்பட்டாலும் சிறுநீர் தடை பிரச்சினை ஏற்படும். மேலும் மலச்சிக்கல் அதிகமானால் புரஸ்டேட் கிளான்ட், பிளாடர் அதிக அழுத்தம் அடைந்து சிறுநீரகத் தடை ஏற்படும். சிறுநீரக பாதிப்பு ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு உடல் எடை குறைந்துபோதல், குமட்டல், வாந்தி, சோர்வு, தலைவலி, அடிக்கடி விக்கல், உடலில் தோன்றும் அரிப்பு போன்றவை அறிகுறிகளாகத் தென்படும்.
சிறுநீரகப் பாதிப்பு அதிகளவில் உள்ளவர்களுக்கு பசியின்மை, உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, வெளியேறும் சிறுநீரின் அளவு அதிகரிப்பது அல்லது குறைவது, வாந்தி ஏற்படுவது, தோலில் வெள்ளை நிற படிமங்கள் தென்படுவது, அதிக தாகம், சுவாசிக்கும்போது நாற்றம் எடுத்தல், கை கால்களில் உணர்வு திறன் குறைந்து போதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக